எங்களுக்கு போட்டி நாங்க தான்.. மாஸ் காட்ட களமிறங்கும் Kawasaki Ninja 500 – லாஞ்சு எப்போது? விலை என்ன தெரியுமா?
கவாஸாகி இந்தியா, வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 மாத வாக்கில் தங்கள் புதிய நிஞ்ஜா 500ஐ அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிஞ்ஜா 500 ஆனது கடந்த ஆண்டு EICMAல் (Exhibition of International Motorcycle and Accessories) வெளியிடப்பட்டது, மேலும் ஏற்கனவே இந்தியாவில் உள்ள நிஞ்ஜா 400க்கு மாற்றாக இது பார்க்கப்படுகிறது.
நிஞ்ஜா 500 பற்றி பார்க்கும்போது அதன் முக்கிய அம்சங்களாக 451சிசி, பேரலல்-ட்வின் இன்ஜின் முதல் ஈர்ப்பை பெறுகின்றது. மேலும் இது 9,000rpmல் 45.4bhp மற்றும் 6,000rpmல் 42.6Nm திறன் தருகின்றது. இதன் இன்ஜின் ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் உதவி மற்றும் ஸ்லிப் கிளட்ச் உள்ளது. நிஞ்ஜா 400 இன் எஞ்சினை விட இது சிறந்தது. மேலும் இந்த புதிய நிஞ்ஜா 500ல் முறுக்குவிசையை வழங்க புதிய மில் டியூன் செய்யப்பட்டுள்ளதாக கவாஸாகி கூறுகிறது.
மேலும் பல சிறப்பு அம்சங்களுடன் களமிறங்கும் இந்த நிஞ்ஜா 500ன் விலை சுமார் ரூ. 5.2 லட்சம் முதல் ரூ. 5.4 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் மாத இறுதியில் வெளியாகும் இந்த பைக்கிற்கான முன் பதிவுகள் விரைவில் துவங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் கவாஸாகி நிறுவனம் தனது W175 என்ற புதிய பைக் ஒன்றை அறிமுகம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.