“நாடு தற்போது ராமர்மயமாகி வருகிறது..!” – தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

மிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார்.

அப்போது, அவருக்கு அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரங்கநாதர் சந்நிதி, தாயார் சந்நிதிகளில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தாயார் சந்நிதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சந்நிதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூய்மை பணியில் ஆளுநர்

“நம்முடைய வாழ்க்கையில் கோயில்கள் மையமாக அமைந்துள்ளன. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோயில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோயில்கள் உள்ளன. காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது.

தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல, பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் தூய்மை பேண வேண்டும்” என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *