பணக்காரர்களுக்கு வழங்கப்படும் தங்க விசாவை ரத்து செய்த நாடு: காரணம் இதுதானாம்…
அவுஸ்திரேலியா, பெரும் தொகை முதலீடு செய்யும் செல்வந்தர்களுக்கு வழங்கப்படும் ’தங்க விசாவை’ ரத்து செய்துள்ளது.
காரணம் இதுதான்
சில நாடுகள், தங்கள் நாட்டில் பெரும் தொகை முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்காக விசா ஒன்றை வழங்குகின்றன. அந்த விசா ’தங்க விசா’ என அழைக்கப்படுகிறது.
அத்தகைய விசா ஒன்றை அவுஸ்திரேலியாவும் வழங்கிவந்த நிலையில், அந்த விசா எதிர்பார்த்த பொருளாதார விளைவுகளைக் கொடுக்கவில்லை என்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, அந்த விசா வழங்குவது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், ஊழல் பேர்வழிகள், தங்கள் மோசடிப் பணத்தைக் கொண்டுவந்து அவுஸ்திரேலியாவில் கொட்டுவதற்கு இந்த திட்டம் வழிவகை செய்வதாக நீண்ட நாட்களாகவே விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குறைந்தபட்சம் 5 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் முதலீடு செய்யும் வெளிநாட்டவர்களுக்கு இந்த விசா வழங்கப்பட்டுவந்தது.
மாற்று திட்டம்
இப்படி தங்கள் நாட்டுக்கு பலனளிக்காத திட்டத்தை ரத்து செய்வது என முடிவு செய்துள்ள அவுஸ்திரேலியா, அதற்கு பதிலாக கூடுதல் திறன்மிகுப் பணியாளர்கள் விசாக்களை வழங்க முடிவு செய்துள்ளது.