கண்டெடுக்கப்பட்ட 5,765 பொருட்களை அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு..!

சிவகங்கை மாவட்ட கீழடியில் 2013ம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை அகழாய்வை தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். இவர்களது தலைமையில் நடத்தப்பட்ட 02-ம் கட்ட அகழாய்வில் 5000-க்கும் மேலான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்த 982 பக்கமுடைய அறிக்கையை மத்திய அரசிடம் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஒப்படைத்தார். பிறகு இவருக்கு பதில் தொல்லியல் பொருட்கள் பாதுகாவலரான ஸ்ரீராமன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த இடமாற்றம் குறித்து சென்னை வழக்கறிஞர் கனிமொழி 2016ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கானது இவ்வாண்டு ஜனவரி மாதம் மதுரையின் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கையையும், அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையையும் மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஒப்படைக்க வேண்டும் என கூறி இவ்வழக்கை 02 வாரத்திற்கு ஒத்தி வைத்தது. இதனை தொடர்ந்து 2ம் கட்ட அகழாய்வு குறித்த அமர்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கை மத்திய அரசால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின் உயர் நீதிமன்ற மதுரை கிளையானது 2ம் கட்ட அகழாய்வில் கிடைத்த 5,765 பழமையான பொருட்களை காட்சிப்படுத்த தமிழக அரசிடம் உடனே ஒப்படைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *