இந்தியாவே தவம் கிடந்த விலை குறைவான எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடக்கம்! ஆளாளுக்கு ஒன்னு வாங்கி ஓட்ட போறாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த டாடா பன்ச் இவி (Tata Punch EV) கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள 4வது எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.
முன்னதாக டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV) மற்றும் டாடா டியாகோ இவி (Tata Tiago EV) ஆகிய எலெக்ட்ரிக் கார்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் வந்துள்ள டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் டெலிவரி (Delivery) பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை வாடிக்கையாளர்கள் டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வைரல் வீடியோவானது, யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. சரி, இனி டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய முக்கியமான தகவல்களுக்கு வருவோம்.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவை ஸ்மார்ட் (Smart), ஸ்மார்ட்+ (Smart+), அட்வென்ஜர் (Adventure), எம்பவர்டு (Empowered) மற்றும் எம்பவர்டு+ (Empowered+) ஆகியவை ஆகும். அதே நேரத்தில் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவை 25kWh மற்றும் 35kWh ஆகியவை ஆகும். இதில், 25kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 315 கிலோ மீட்டர்கள் எனவும், 35kWh பேட்டரி ஆப்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் 421 கிலோ மீட்டர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில், அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சமில்லை.
இதில், 10.25 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஏர் ப்யூரிஃபையர் மற்றும் முன் பகுதியில் வென்டிலேட்டட் இருக்கைகள் போன்ற வசதிகள் எல்லாம் இங்கே குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதுதவிர 360 டிகிரி கேமரா, ப்ளைண்ட் ஸ்பாட் மானிட்டர் மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் போன்றவையும், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் முக்கியமான வசதிகளாக இருக்கின்றன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாய் மட்டுமே.
அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 14.49 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) மற்றும் சிட்ரோன் இசி3 (Citroen eC3) ஆகிய எலெக்ட்ரிக் கார்களுடன், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் போட்டியிடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.