21 கிமீ மைலேஜ் தரும் ஹூண்டாய் காரின் டெலிவரி பணிகள் தொடங்கியது.. இதோ ஃபோட்டாலாம்கூட வெளியாகிருக்கு!

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட கிரெட்டா (Facelift Creta) காரின் டெலிவரி பணிகளை நாட்டில் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹூண்டாய் அக்காரை வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கும் (டெலிவரி செய்யும்) படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. வாங்க இதுகுறித்த விரிவான பதிவிற்குள் போகலாம்.

முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய் (Hyundai), அதன் புகழ்பெற்ற கார் மாடலான கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift Creta) வெர்ஷனை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்குக் களமிறக்கியது. இதன் விற்பனைக்கான அறிமுகத்திற்கு முன்னரே நாட்டில் ப்ரீ புக்கிங் பணிகள் தொடங்கின. இந்த நிலையிலேயே முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு புதிய கிரெட்டாவை டெலிவரி கொடுக்கும் பணியில் ஹூண்டாய் களமிறங்கி இருக்கின்றது.

இந்தியர்கள் பலரின் பிரியமான எஸ்யூவி ரக கார் மாடலாக கிரெட்டா இருக்கின்றது. சொல்லப்போனால் நாட்டின் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக காராகவும் கிரெட்டா உள்ளது. இத்தகைய கார் மாடலின் பக்கம் இந்தியர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் பொருட்டே ஹூண்டாய் நிறுவனம் அதனை புதுப்பித்து சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

இதற்கு அறிமுகமாக ரூ. 10.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஹூண்டாய் நிறுவனம் புதுப்பித்தலின்பேரில் மிகவும் அழகிய மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராகவே கிரெட்டாவை தயார் செய்திருக்கின்றது.

ஆகையால், அடுத்து வரும் நாட்களிலும் கிரெட்டா பெஸ்ட் செல்லிங் எஸ்யூவி ரக கார்களில் இடம் பிடித்திவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த காரின் முகப்பு மற்றும் பின் பகுதி இரண்டும் எஸ்யூவி கார் காதலர்களைக் கவரும் வகையில் இருக்கின்றது. எஸ்யூவி கார் பிரியர்களை மட்டுமல்ல அனைத்து விதமான கார் காதலர்களின் கவனத்தையும் புதிய கிரெட்டா ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் அந்த அளவிற்கு சிறப்பம்சங்களையும் இந்த காரில் ஹூண்டாய் வாரி வழங்கி இருக்கின்றது. உதாரணமாக அட்வான்ஸ்டு ப்ளூ லிங்க் இணைப்பு வசதி வாயிலாக 70க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதியை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது. எஞ்சின் ஸ்டார்ட்-ஸ்டாப், டோர் லாக்-அன்லாக், வாகனம் சார்ந்த அலர்ட்டுகள் என ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

மேலும், லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பம் (முந்தைய கிரெட்டாவில் இது வழங்கப்படவில்லை), தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிராவும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

வெளிப்புறத்தைக் கவர்ச்சியாக காண்பிக்கும் விதமாக புதிய கிரில், பம்பர் மற்றும் லைட் செட்-அப் ஆகியவற்றை வழங்கப்பட்டிருப்பதைப் போலவே மேலே பார்த்த தொழில்நுட்ப அம்சங்கள் காரின் உட்பக்கத்தையும், ரைடிங் அனுபவத்தையும் அழகாக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. புதிய கிரெட்டா ஒட்டுமொத்தமாக 7 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

அவை இ (E), இஎக்ஸ் (EX), எஸ் (S), எஸ் ஓ (S O), எஸ்எக்ஸ் (SX), எஸ்எக்ஸ் டெக் (SX Tech) மற்றும் எஸ்எக்ஸ் ஓ (SX O) ஆகும். இத்துடன், மூன்று விதமான மோட்டார் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படுகின்றது.

அவை 1.5 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகும். இந்த மோட்டார்களுடன் 6 எம்டி, 6 ஐஎம்டி, 7 டிசிடி ஆகிய டிரான்ஸ்மிஷன் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், அதிகம் மைலேஜ் தரும் தேர்வாக டீசல் இருக்கின்றது. டீசல் 6 எம்டி ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 21.8 கிமீ வரை மைலேஜ் தரும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *