கார்ப்பரேட் ஊழியர்களை வறுத்தெடுத்த தோசை கடைக்காரர்..! உங்களை விட அதிகம் சம்பாதிக்கிறேன்..

ன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் மாத சம்பளம் தரும் வேலைக்குச் செல்வதை விரும்பாத ஒரு டிரெண்ட் ஓடிக்கொண்டு இருப்பதைப் போல, படிக்காவிட்டாலும் அதிகமாகச் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் வேளையில் ஒரு தோசை கடைக்காரர், கார்பரேட் ஊழியர்களை வறுத்தெடுத்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது.தெருவோர உணவகத்தில் தோசை விற்பனையாளர் ஒருவரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், தோசை கடைக்காரர் மாதத்திற்கு ரூ.30,000 முதல் ரூ 40,000 வரை சம்பளம் வாங்கும் சில கார்ப்பரேட் வேலைகளில் சிக்கிக் கொள்ளாமல் படிக்காவிட்டாலும், நிறையச் சம்பாதிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த வீடியோவில் தோசை கடைக்காரர், வீடியோ எடுக்கும் நபரிடம் அமுல் வெண்ணெய் பாக்கெட்டை நீட்டி, இது உண்மையில் அமுல்தானா என்பதைச் சரிபார்க்கும் படி கேட்கிறார். அப்போது நான் அதிகம் படித்தவன் இல்லை, அதனால் வெண்ணெய் பாக்கெட்-ல் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைத் தன்னால் படிக்க முடியாது என விளக்கம் கூறுகிறார்.ஆனால் காலையில் 9 முதல் மாலை 5 மணி வரையில் வேலைகளில் உள்ள ‘படித்த’ ஊழியர்களைக் கிண்டல் செய்யும் வகையில், நான் அதிகம் படிக்காததால் நிறையச் சம்பாதிக்கிறேன். இல்லையெனில் நானும் மாதம் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் பெற்றுக்கொண்டு ஏதாவது வேலை செய்து கொண்டிருப்பேன் என இந்த வீடியோவில் பேசியுள்ளார். இந்த வீடியோ மாத சம்பளத்தில் வேலை பார்க்கும் பலரையும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்த காரணத்தால் சுமார் 16 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த வீடியோவுக்குக் கீழ் பலர் கார்பரேட் அடிமைகளை இவர் கலாய்த்துவிட்டார், என்னை Emotional damage செய்துவிட்டார் எனப் புலம்பி வருகின்றனர்.ஆனால் உண்மையில் படிக்கவில்லை என்றால் அதிகம் சம்பாதிக்க முடியுமா..? என்றால் எல்லோராலும் முடியாது. பல பெரும் கோடீஸ்வரர்களும் ஏன் இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் அதானி கூடத் தான் நினைத்ததைப் படிக்க முடியவில்லை என்று புலம்பி வருகிறார்.அதிகமாகச் சொத்து இருப்பவர்களும், தங்களுடைய பிள்ளைகளுக்குப் பணத்தைக் கொடுத்தால் போதுமென நினைக்கவில்லை, உயரிய கல்வியைக் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இதற்கு முகேஷ் அம்பானியின் 3 பிள்ளைகளும் உதாரணம். நீங்க எந்தத் தொழில் செய்தாலும் படிப்பு உங்களை வேகமாக உச்சத்திற்குக் கொண்டு செல்லும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *