ஆஸ்கர் விழா மேடையில் நிர்வாணமாக தோன்றிய பிரபல நடிகர் ஜான் செனா.. ரசிகர்கள் அதிர்ச்சி.
உலகளவில் திரைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 96-வது ஆஸ்கர் விருது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடந்து வருகிறது.
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நடக்கும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் பேசு பொருளாக மாறுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு நடந்து வரும் ஆஸ்கர் விழாவில் பிரபல நடிகர் ஒருவர் நிர்வாணமாக கலந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் வேறு யாருமில்லை ஜான் செனா தான். அவரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல் மேடைக்கு அழைத்த போது, ஜான் நிர்வாணமாக தோன்றினார்.
மல்யுத்த வீரராக இருந்து நடிகராக மாறிய ஜான் செனா ஆஸ்கர். மேடையில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை ‘புவர் திங்ஸ்’ படத்திற்கு வழங்கினார். அவர் நிர்வாணமாக வந்த சம்பவம் பலருக்கும், அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்திய நிலையில், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மல், அகாடமி விருதுகளின் கடந்த காலத்திலிருந்து ஒரு மோசமான தருணத்தை நினைவு கூர்ந்தார், பார்வையாளர்களிடம் நகைச்சுவையாக, “இன்று ஒரு நிர்வாண மனிதன் மேடையில் ஓடினால் உங்களால் கற்பனை செய்ய முடியுமா? அது பைத்தியக்காரத்தனமாக இருக்காது?” 1974 ஆம் ஆண்டு 46வது ஆஸ்கார் விருதுகளின் போது, இது போன்ற ஒரு சம்பவம் நடந்தது.
ஜான், சட்டையின்றி, எதிர்பாராதவிதமாக மேடையில் தோன்றி, ஸ்ட்ரீக்கர் கேக்கில் பங்கேற்பது குறித்து மனமாற்றத்தை வெளிப்படுத்தியபோது, “நான் என் மனதை மாற்றிக்கொண்டேம் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “ஆண் உடல் ஒரு நகைச்சுவை அல்ல” ஏன்று கூறினார்.
தொடர்ந்து ஹாலிவுட் நட்சத்திரம் எம்மா ஸ்டோன் நடித்த ‘புவர் திங்ஸ்’ திரைப்படத்திற்கு கிடைத்த சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை அவர் அறிவித்தார். இந்த திரைப்படம் சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக மட்டுமல்லாமல் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான பாராட்டுகளையும் பெற்றது.
https://twitter.com/LeoDasVj/status/1766987200380436950
96வது அகாடமி விருதுகளில் ‘புவர் திங்ஸ்’ படம் மொத்தம் 11 பிரிவின் கீழ் பரிந்துரை செய்யப்பட்டது. எம்மா ஸ்டோனின் பெல்லா, ஒரு தனித்துவமான பின்னணியுடன் கூடிய விக்டோரியன் காலப் பெண்மணியின் சித்தரிப்பு, பரவலான பாராட்டைப் பெற்றது, கோல்டன் குளோப்ஸ், கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருதுகள் மற்றும் பாஃப்டா விருதுகள் போன்ற மதிப்புமிக்க விருது நிகழ்ச்சிகளிலும் இந்த படம் வெற்றி பெற்றது.
அலாஸ்டெய்ர் கிரேயின் நாவலை அடிப்படையாகக் கொண்டு புவர் திங்ஸ் படத்தை யோர்கோஸ் லாந்திமோஸ் என்பவர் இயக்கிநார். மார்க் ருஃபாலோ, வில்லெம் டஃபோ மற்றும் ரமி யூசெஃப் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வித்தியாசமான கதைக்களம், அறிவியல் புனைகதை, டார்க் காமெடி என பல கூறுகள் ரசிகர்களை கவர்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.