காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகர்… நடந்தது என்ன?

ஆஸ்கர் விருது பெற்ற படத்தின் நடிகர் சர்ச்சைக்குரிய வகையில் உயிரிழந்துள்ளார். அவரது மரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பாரசைட் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வர்த்தக ரீதியில் வசூலை அள்ளி குவித்தது. பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்ற இந்த திரைப்படம் உச்ச விருதாக கருதப்படும் ஆஸ்கரையும் தட்டி சென்றது.

வறுமையால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் ஒரு பணக்கார குடும்பத்தில் ஒட்டுமொத்தமாக வேலைக்கு சேர்வார்கள். ஆனால் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை சொல்லாமல், அந்த பணக்கார குடும்பத்தின் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடுவார்கள். தியேட்டர் ரிலீஸிற்கு பின்னர் இந்த படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்தது.

பாரசைட் படத்தை பிரபல தென்கொரிய இயக்குனர் பாங் ஜூன் ஹோ இயக்கியிருந்தார். நடிகர் லீ சுன் க்யூன் முக்கிய கேரக்டரில் இடம்பெற்றார். பாரசைட் படம் ஆஸ்கர் விருதை பெற்றதும் படத்தில் இடம்பெற்ற திரை கலைஞர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் இன்று மர்மமான முறையில் நடிகர் லீ சுன் க்யூன் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48. தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஒரு ஒரு பூங்காவில் அவரது கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதற்குள் லீ உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது மரணம் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது பற்றி அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லீ சுன் க்யூன் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருந்தார். இது அவரது நற்பெயருக்கு களங்கம் விளைவித்த நிலையில் அதற்காக அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். இந்நிலையில் காருக்குள் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் காரணமாக லீ சுன் க்யூன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு தென் கொரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக லீ கியூன் மன வருத்தத்தில் இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் அவர் தன்னை தற்கொலை செய்திருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் முழு விசாரணைக்கு பின்னரே நடந்தது என்ன என்பது தெரிய வரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *