தனது ஆடம்பர ஜெட் விமானத்தை 365 கோடிக்கு விற்ற பிரபல பாடகி!

பிரபல அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் தனது பிரைவேட் ஜெட்டை 44 மில்லியன் டொலருக்கு விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

டெய்லர் ஸ்விஃப்ட்
சமீபத்தில் நடந்த 66வது கிராமி விருதுகள் விழாவில் பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ”Midnights” என்ற ஆல்பத்திற்காக விருது பெற்றார்.

டெய்லர் ஸ்விஃப்ட் (Taylor Swift) சொந்தமாக இரண்டு ஜெட் விமானங்களை வைத்திருந்தார். அவற்றில் ஒன்றை அவர் 44 மில்லியன் டொலர்களுக்கு (இந்திய மதிப்பில் 365 கோடி) விற்றதாக கல்லூரி மாணவர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது.

பிரபலங்கள், கோடீஸ்வரர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிற பொது நபர்களுக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் விமானப் பாதைகளைக் கண்காணிக்கும் பல கணக்குகளை the University of Central Florida-யில் ஜூனியராக பயின்று வரும் மாணவரான ஜேக் ஸ்வீனி நடத்தி வருகிறார்.

ஆடம்பர ஜெட் விமானம்
அதேபோல் டெய்லர் ஸ்விஃப்ட்டின் தனிப்பட்ட ஜெட் நகர்வுகளை கண்காணித்து தனது பதிவுகளில் ஸ்வீனி பகிர்ந்ததற்காக சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள அச்சுறுத்தப்பட்டார்.

தனிப்பட்ட ஜெட் விமானத்தை கண்காணிப்பதாக ஸ்விஃப்ட்டின் வழக்கறிஞர்களால் குற்றம்சாட்டப்பட்டு Cease மற்றும் Desist கடிதங்களை ஸ்வீனி பெற்றார்.

இந்த நிலையில் தான் ஸ்விஃப்ட் தனது ஜெட் விமானத்தை விற்றாக ஸ்வீனி வெளியிட்டார். ‘Number 13’ எனும் அந்த தனியார் ஆடம்பர ஜெட் விமானம் சுமார் 44 மில்லியன் டொலர்கள் மதிப்புடையது என்றும், ஜனவரி 30 அன்று மிசோரியை தளமாகக் கொண்ட Triangle Real Estate LLC-க்கு விற்கப்பட்டதாக Federal Aviation Authority (FAA) தரவு வெளிப்படுத்தியுள்ளது.

ஸ்விஃப்டுக்கு சொந்தமான இரு ஜெட் விமானங்களில், விற்கப்பட்ட ஜெட் விமானம் 12 இருக்கைகளைக் கொண்ட சிறிய விமானம் ஆகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *