விமானத்தின் என்ஜினுக்குள் ஏறிய மர்ம நபருக்கு நேர்ந்த கதி: விமான நிலையத்தில் பரபரப்பு

அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி விமான நிலையத்தில் நின்ற விமானத்தின் என்ஜினுக்குள் அத்துமீறி ஏறிய நபர் உயிரிழந்துள்ளார்.

பார்க் சிட்டியை சேர்ந்த 30 வயது கைலர் எஃபிங்கர்(Kyler Efinger) என்ற நபர் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் திங்கட்கிழமை இருந்த போது விதியை மீறி அவசர கதவை உடைத்துள்ளார்.

இதையடுத்து ஓடுபாதையில் இறங்கி பின்னர் ஜெட் விமானத்தின் எஞ்சின் பகுதிக்குள் அத்துமீறி ஏறியுள்ளார். அப்போது விமானம் de-icing pad-ல் அமர்ந்து இருந்ததோடு, அதன் விசையாழிகள் சுழன்று கொண்டு இருந்துள்ளன.

இறுதியில் டென்வருக்கு போர்டிங் பாஸ் வைத்து இருந்த கைலர் எஃபிங்கர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.

விமானம் ரத்து

சால்ட் லேக் சிட்டி தெரிவித்துள்ள தகவலில், எஃபிங்கர் சுயநினைவு இழந்த நிலையில் அவர் எஞ்சின் இன்டேக் கவுலிங்கில் பகுதியில் இருந்து அவசர சேவைகளால் வெளியே இழுக்கப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் பயணிகளின் பாதுகாப்பு கருதி Delta 2348 விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கைலர் எஃபிங்கர் நடவடிக்கை குறித்து விசாரணையை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *