எமக்குத் தொழில் ரொமான்ஸ்… பாரதி வரியை பாதியாக நறுக்கிய படக்குழு!

அசோக் செல்வன் நடிப்பில் சென்ற வருடம் வெளியான போர் தொழில் தமிழ் சினிமாவுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. கச்சிதமான கதை, திரைக்கதையில், வழக்கமான கிளிஷேக்கள் தவிர்த்து எடுக்கப்பட்ட போர் தொழில் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றிகரமாக ஓடியது. படத்தின் ஓடிடி உரிமையும் 10 கோடிகளுக்கு மேல் விற்கப்பட்டது.

இந்த வருடம் வெளியான நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படமும் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. இதையடுத்து அவர் நடித்துவரும் படத்துக்கு, எமக்குத் தொழில் ரொமான்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்குகிறார். அவந்திகா நாயகியாக நடித்துள்ள இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தை திருமலை தயாரித்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். பாரதியின், எமக்குத் தொழில் கவிதை என்ற வரியை எமக்குத் தொழில் ரொமான்ஸ் என மாற்றி வைத்துள்ளனர். படத்தின் டைட்லும், பர்ஸ்ட் லுக்கில் நாயகனும், நாயகியும் அணைத்துக் கொண்டிருக்கும்விதமும் இதுவொரு ஹார்ட்கோர் காதல் திரைப்படம் என்பதை உணர்த்துகின்றன.

அசோக் செல்வன் நடிப்பில் பொன் ஒன்று கண்டேன் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. வி.ப்ரியா இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் ஐஸ்வர்யா லட்சுமி, வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குக்குப் பதில் முதலில் தொலைக்காட்சியில் வெளியாகும் என தயாரிப்புத்தரப்பு புரமோ வெளியிட்டதால் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *