தியேட்டருக்கு முன்பே டிவியில் வரும் படம்.. கொந்தளித்த பிரபல நடிகர்
பொதுவாக அனைத்து படங்களும் தியேட்டரில் முதலில் ரிலீஸ் ஆகி, அதன் பின் ஓடிடியில் வெளிவந்து சில மாதங்கள் கழித்து தான் டிவியில் ஒளிபரப்பாகும். கொரோனா காலத்தில் தான் நேரடி ஓடிடி ரிலீஸ், நேரடி டிவி ரிலீஸ் என சில படங்கள் மட்டும் வெளியாகின.
ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டபோதிலும் ‘பொன் ஒன்று கண்டேன்’ என்ற படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல் டிவியில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விரைவில் கலர்ஸ் தமிழ் சேனலில் படம் வர இருக்கிறது.
கொந்தளித்த நடிகர்
பொன் ஒன்று கண்டேன் படத்தில் நடித்து இருக்கும் நடிகர் வசந்த் ரவி தற்போது இது பற்றி கோபமாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இந்த படத்தில் அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் நடித்து இருக்கின்றனர்.
ஜியோ ஸ்டுடியோஸ் போன்ற பெரிய நிறுவனமே இப்படி செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது என வசந்த் ரவி கூறி இருக்கிறார்.
இந்த படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். படக்குழுவில் யாருக்குமே தெரியப்படுத்தவில்லை.
“தயாரிப்பாளரிடம் படம் சென்ற பிறகு கமர்சியல் விஷயங்களில் கலைஞர்கள் தலையிட முடியாது தான். ஆனால் இந்த விஷயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தி இருக்கலாம். மீடியாவை பார்த்து தான் தெரிந்துகொண்டோம்” என வசந்த் ரவி கோபமாக பேசி இருக்கிறார்.