உயிரை பணையம் வைத்து நாயை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்.. வைரலாகும் வீடியோ!
நம்மில் பலரும் வீட்டில் செல்லப் பிராணிகளை அன்போடு வளர்த்து வருகிறோம். இவை நமக்கு உற்ற நண்பனாகவும் நம்பிக்கையான பாதுகாவலனாகவும் இருந்து வருகிறது. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான் நட்புறவை வெளிப்படுத்தும் பல வீடியோக்கள் இணையத்தில் காணக் கிடைக்கின்றன. இதில் சில நம் மனதிற்கு நெருக்கமானதாகவும் உத்வேகம் தருவாதகவும் இருக்கிறது. குறிப்பாக தங்களது வலிகளை வெளியே கூற முடியாத இதுபோன்ற உயிரினங்களுக்கு தங்கள் உயிரையும் பொறுட்படுத்தாமல் உதவி செய்யும் நல்ல உள்ளங்கள் இந்த உலகத்தில் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை இதுபோன்ற வீடியோக்கள் நமக்கு தெரியப்படுதுகின்றன.
சமீபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பனிக்கட்டியில் உறைந்து போன ஏரியில் சறுக்கியபடியே சென்று, அங்கே சிக்கியிருந்த நாய் ஒன்றை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் வைரலானது. ஒரு ஹீரோ போல் அவர் செய்த செயல் பலரது உள்ளங்களை மகிழ்வித்ததோடு பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.
பிரபல சோசியல் மீடியாவான X தளத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், பாறை போல் பனி உறைந்து போன ஏரியில் ஸ்கேட்டிங் ஸ்டிக் போன்றிருப்பதை பயன்படுத்தி சறுக்கியபடியே தீயணைப்பு வீரர் ஒருவர் செல்கிறார். தூரத்தில் நாய் ஒன்று குளிர் நிறைந்த தண்ணிரில் சிக்கியிருப்பது நமக்கு தெரிகிறது. அதை நோக்கிதான் அந்த வீரரும் சென்று கொண்டிருக்கிறார். நாயின் அருகே சென்றதும், எந்தவித பதட்டமும் இல்லாமல் அதை நீரிலிருந்து காப்பாற்றி தன் அருகில் வைத்துக் கொள்கிறார். பின்னர் இருவரும் பாதுகாப்பான பகுதிக்கு கரை சேர்கின்றனர்.
Firefighter rescues a dog stuck in an icy lake..
Not all heroes wear a cape.. ❤️ pic.twitter.com/KSZOk7kqpo
— Buitengebieden (@buitengebieden) January 21, 2024
“குளிர்ச்சியான ஏரியில் சிக்கிய நாயை காப்பாற்றிய தீயணைப்பு வீரர். சாதாரண வீரர்களும் ஹீரோக்கள்தான்” என தலைப்பிட்டு இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த வீடியோ 14 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. பலரும் தீயணைப்பு வீரரின் அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சிக்கு பாராட்டுகளை தெரிவித்தபடி இருக்கின்றனர். இவர்தான் உண்மையான ஹீரோ. இப்படி செய்வதற்கு விசேஷமான துணிச்சல் வேண்டும். தங்கள் உயிர் பற்றி கவலைப்படாமல் ஆபத்தில் சிக்கியிருக்கும் விலங்கை காப்பாற்ற எவ்வளவு பெரிய மனம் வேண்டும். அதை இந்த தீயணைப்பு வீரர் இன்று வெளிப்படுத்தியுள்ளார் என ஒருவரும் எதையும் யோசிக்காமல் இதுபோல் உதவி செய்யும் மனிதர்கள் இன்றும் இருக்கிறார்கள் என்று இன்னொருவரும் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த வீரர் நிஜமான ஹீரோ. நானும் பல வருடங்களுக்கு முன்பு இதுபோல் ஆற்றிலிருந்து நாயை காப்பாற்றியுள்ளேன். ஆனால் அதற்கு அதிக நேரம் ஆனதால், அன்று வேலைக்கு தாமதமாகவே சென்றேன். இதனால் என்னை வேலையை விட்டே நீக்கினர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் சரியான காரியம் ஒன்றை செய்திருக்கிறேன். அந்த திருப்தியே போதும் என இதேப்போன்று நடந்த சம்பவம் ஒன்றை இன்னொரு யூசரும் பகிர்ந்துள்ளார்.
எப்படி இவ்வளவு குறைவான சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த தீயணைப்பு வீரர்கள் இவ்வுளவு கடுமையாக உழைக்கிறார்கள் என்றும் இந்த ஹீரோக்கள் கை நிறை சம்பளம் வாங்குவதில்லை. இவர்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரையே பணையம் வைக்கிறார்கள் என்றும் பலர் இந்த வீடியோவிற்கு கருத்து தெரிவித்துள்ளனர்.