முதல் சதமே சாதனை.. 3 வீரர்கள் செய்த சம்பவம்.. மகளுக்கு சிட்னி என பெயர் வைத்த லாராவின் பின்னணி
மேற்கு இந்திய அணி கிரிக்கெட் வீரர்கள் மூன்று ஆட்டக்காரர்கள் தாங்கள் டெஸ்டுகளில் எடுத்த முதல் சதங்களில் சாதனை புரிந்து உள்ளனர்.
காரி சோபர்ஸ் 1957 – 58 ல் பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதம் பதிவு செய்தார். அதுவே மூன்று சதமாக மாறியது. ( triple century ) அவரது ஸ்கோர் 365 *
இந்த ரன்கள் குவிக்கும் பொழுது, அன்றைய கால கட்டத்தில் அதிக பட்சமான இங்கிலாந்தின் ஸர் லென் ஹட்டனின் ( Sir Len Hutton) 364 ரன்களை கடந்து உலக சாதனைப் படைத்தார். லாவ்ரன்ஸ் ரோவ் (Lawrance Rowe ) தனது அறிமுக டெஸ்ட் மேட்சிலேயே சதங்கள் எடுத்து அசத்தினார்.
சபீனா பார்க் மைதானத்தில் 1972 ல் நியூஸிலாந்து அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் ஆடினார். துவக்க இன்னிங்சில் இவர் எடுத்தது இரட்டை சதம் ( Double Century ) ரன்கள் 214. தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சில் 100* நாட் அவுட்.
இந்த அறிய சாதனைப் படைத்தார் ரோவ் . பிரைன் லாரா ( Brain Lara) தனது முதல் சதத்தை அவரது 5 டெஸ்டில் பதிவு செய்தார். அதுவும் இரட்டை சதமாக ( Double Century ) 1993 ஆஸ்திரே லியாவின் சிட்னி ( Sydney ) மைதானத்தில். 277 ரன்கள்.இந்த ஆட்டத்தின் நினைவாக இவர் மகளுக்கு சிட்னி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். இவர் டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட் மேட்சுகளில் தனி நபர் அதிக பட்ச ரன்களுக்கு சொந்தக்காரர். முறையே 400* மற்றும் 501* ரன்கள்.
ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினின் சாதனையை கோலி முறியடித்ததற்கும் ஒரு காரணம் இருக்கிறது. சச்சினின் ஆரம்ப காலக் கட்டத்தில் நடுவரிசையில் தான் விளையாடினார். அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பே வரவில்லை. தன்னுடைய 79வது ஒருநாள் போட்டியில் அதாவது, அறிமுகமாகி 5 ஆண்டுகள் கழித்து தான் சச்சின் முதல் சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோலி எப்போதும் 3வது இடம் என்பதால், அவருக்கு தொடக்கத்தில் இருந்தே அதிக வாய்ப்பு சதம் அடிக்க கிடைத்தது.