அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோவில்.. நேரில் சென்று திறக்கும் பிரதமர் மோடி..!
இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் அபுதாபி புறப்படுகிறார் பின் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கிறார்.
இந்த பயணத்தின் போது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை மோடி சந்திக்கிறார். மற்றும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
2015ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்வது இது ஏழாவது முறையாகும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. வரும் 14ம் தேதி அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைக்கும் மோடி, இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த மக்களிடமும் உரையாற்ற உள்ளார்.
இது தொடர்பாக மேலும் தகவல் வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம், “2024-ம் ஆண்டு துபாயில் நடைபெற உள்ள உலக அரசு உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்று உச்சி மாநாட்டில் சிறப்புரை ஆற்றுகிறார்.இது தொடர்பாக மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “2024ல் துபாயில் நடைபெற உள்ள உலக அரசு உச்சி மாநாட்டில் பிரதமர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உச்சி மாநாட்டில் சிறப்புரை ஆற்றுவார்.