அபுதாபியில் பிரதமர் மோடியால் திறக்கப்பட உள்ள முதல் இந்து கோயில்.. பிரமிக்க வைக்கும் வீடியோ..

அபுதாபியில் போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) என்பவரால் கட்டப்பட்ட முதல் இந்து கோவிலை பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 14ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த கோயில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள கோவில்களில் முதன்மையானதாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்து மதத்தின் கலாச்சார வளமையை பிரதிநிதித்துப்படுத்தும் வகையில் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு தாக்கங்களுடன் இந்திய பாரம்பரிய பாணியை சேர்ந்து இந்த கோயில் கட்டப்பட்டுள்ளாது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரதம ர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல உள்ள இரண்டு நாள் பயணத்தின் போது, BAPS மந்திரை பிரதமர் திறந்து வைக்க உள்ளார்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்திய தூதர் சுஞ்சய் சுதிர், இந்தியாவிற்கும் வளைகுடா பகுதிக்கும் இடையிலான வலுவான கலாச்சார, சமூக மற்றும் பொருளாதார உறவுகளின் சின்னமாக இந்த கோவிலை உள்ளதாக தெரிவித்தார்..

இதுகுறித்து மேலும் பேசிய அவர் “ கோவிட் தொற்றுநோய் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், இந்திய கைவினைஞர்கள் மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் கட்டப்பட்ட கோயில், ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பைக் காட்டுகிறது” என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் தற்போதைய பயணம் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான வலுவான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவை பிரதிபலிக்கும் வகையில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் மற்றும் தேசிய காப்பகங்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *