டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர்… ஜஸ்பிரித் பும்ரா சாதனை
ஐசிசி டெஸ்ட் தர வரிசை பவுலர்கள் பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஜஸ்பிரித் பும்ரா ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் பும்ரா 9 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில் அவர் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மற்றும் நியூசிலாந்து தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்த நிலையில் இந்த தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டிருக்கிறது.
ஐசிசி டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் பல மாதங்களாக நீடித்த நிலையில் அவர் தற்போது 3 ஆவது இடத்திற்கு சென்றுள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா 2 ஆவது இடத்தில் நீடிக்கிறார். டாப் 10 பவுலர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 9 ஆவது இடத்தில் இருக்கிறார்.
இதேபோன்று டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவன் ஸ்மித் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை தொடர்ந்து 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 3 ஆவது இடத்தில் உள்ளார். டாப் 10 இடத்தில் இந்திய அணியின் விராட் கோலி மட்டும் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் ஆல்ரவுண்டர்களை பொறுத்தளவில் முதல் 3 இடத்தில் இருக்கும் ஜடேஜா, அஷ்வின் மற்றும் ஷகிப் அல் ஹசன் இடங்களில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.