முதன் முதலில் பாடிய பாடலே கடைசி பாடல் ஆனது! பாடகியின் சோகம்!
1980 ஆம் ஆண்டு சுஜாதா என்ற படம் விஜயன், சரிதா, சங்கர், ராஜா நடித்த திரைப்படம் இந்த திரைப்படம் ரீமேக் திரைப்படம் தான்.
இந்தப் பாடிய ஒரு பாடகியின் சோக கதை தான் இது.
இவர் பெயர் கல்யாணி மேனன். இவர் ஒரு ஸ்டேஜில் பாடக்கூடியவர். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் “நீ வருவாய் என நான் இருந்தேன்” என்ற பாடலை இவர் பாடினார். நான் இவரின் முதல் சினிமா பாடலும் இதுதான் கடைசி சினிமா பாடலும் இதுதான்.
இவர் ஒவ்வொரு ஸ்டேஜிலும் பாடலை பாடும் பொழுது, ஒவ்வொரு இடத்திற்கும் ஒருவர் தினமும் வருவாராம். இப்படியே தொடர்ந்து வருவது அவருடன் பேச முயற்சிப்பது என தொடர்ந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இருவரும் மத்திய அரசு வேலை செய்து கொண்டிருந்தனர். அவருக்கு தன் மனைவி சினிமாக்களில் பாட வேண்டும் என்று என ஆசைப்படுள்ளர். அவரே பல ஸ்டூடியோக்களில் பாடும் வாய்ப்பிற்காக கேட்டும் இருக்கிறாராம்.
ஒரு சமயம் கல்யாணி மேனன் அவர்களின் கணவருக்கு வேலை மாற்றம் செய்யப்பட்டு டெல்லிக்கு சென்றுள்ளார். தினமும் கால் செய்து யாரையாவது சென்று பார்த்தாயா? இசையமைப்பாளர்கள் யாராவது ஏதாவது சொன்னார்களா? வாய்ப்பு கிடைத்ததா?.
என கேட்க, “ஆமாம் என்று பார்த்தேன்””நாளைக்கு என்னை பாட வர சொல்லி இருக்கிறார்கள்”. என்று இவர் சொல்லியுள்ளார். மிகவும் சந்தோஷப்பட்டு இருக்கிறார் அவர். மனைவி பாடும் பொழுது நாம் இருக்க வேண்டும் என்று நினைத்த அவர் அரை மணி நேரத்திலேயே விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட் எல்லாம் புக் செய்திருக்கிறார்.
மனைவியும் நான் முதல் முதலாக பாடும் பொழுது நீங்கள் இல்லையே என்று கவலைப்பட்டிருக்கிறார். உடனே நீ ஒன்றும் கவலைப்படாதே. நான் விமானத்திற்கு டிக்கெட் புக் செய்து விட்டேன். நான் நேரடியாக ரெக்கார்டிங் தியேட்டருக்கு வந்து விடுகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.
கல்யாணி மேனன் அவர்களும் ரெக்கார்டிங் தியேட்டருக்கு சென்று பாட்டு பாட தயாராகிறார். இப்பொழுது இவருக்கு கொடுத்த பாடல் “நீ வருவாய் என நான் இருந்தேன் “, ஏன் மறந்தாய் என நான் அறியேன்”
ஒரு மணி ஆகியது. எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் நானும் உன் அப்பாவை போல தான் என்னிடம் ஆசீர்வாதம் வாங்கி நீ தொடங்கு என்று சொல்ல, கல்யாணி மேனன் அவர்களும் அந்த பாடலை பாடி கொடுத்திருக்கிறார். அந்த பாடல் அவ்வளவு அற்புதமாக வந்ததற்கு காரணம் தன் கணவன் வரவில்லை என்று நினைத்து உருகி அந்த பாடலை பாடியதுதானாம்
அதன் பின் இரண்டு மணி ஆகிறது, மூன்று மணி ஆகிறது, கணவன் வரவில்லை. மிகவும் தவித்து போன கல்யாண மேனன் அவருக்கு போன் வருகிறது. அதில் கணவர் இறந்துவிட்டார் என்று. அந்த செய்தியை கேட்டதும் மிகவும் துடிதுடித்துப் போய் விடுகிறார்.
ஏர்போர்ட்டுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கார் டிரைவரிடம் வேகமாக போக சொல்லி சொல்லி கார் விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணம் நிகழ்ந்திருக்கிறது.