ரெனால்ட் தயாரித்திருக்கும் கார பார்த்தா மாருதியே வீட்டுக்கு போயிடும் போலையே! இத சென்னையில் தயாரிக்க போறாங்களா!

மாருதி சுஸுகி (Maruti Suzuki)யின் தயாரிப்புகள் மலிவு விலைக்கு பெயர்போனவையாக இருக்கின்றன. மேலும், அவற்றை பராமரிப்பதும் சுலபம் ஆகும். இதுதவிர அவை அதிக மைலேஜ் திறனுக்கும் அறியப்படுகின்றன. எனவேதான் இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த அனைத்து குணாதிசயங்களையும் கொண்டதாக ரெனால்ட் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஒன்று இருக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரெனால்ட் நிறுவனத்தின் புகழ்பெற்ற தயாரிப்புகளில் ஒன்றே டஸ்டர் ஆகும். ஆனால், இந்த கார் மாடல் தற்போது இந்தியாவில் விற்பனையில் இல்லை. சில மாதங்களுக்கு முன்னரே இதனை விற்பனையில் இருந்து ரெனால்ட் அகற்றியது.

இந்த நிலையிலேயே இந்த கார் மாடலை மீண்டும் ரெனால்ட் (Renault) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக கொஞ்சம் நாட்களாகவே தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அது இம்முறை இந்தியாவில் புதிய தலைமுறை டஸ்டர் (New Gen Duster)யே விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரின் படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

ரெனால்ட் டஸ்டர் எனும் பேட்ஜில் அந்த காரின் படங்கள் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த கார் மாடல் உலக சந்தையில் டாசியா எனும் பிராண்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆகையால், இதுநாள் வரை இந்த பிராண்டில் மட்டுமே அது காட்சி தந்துக் கொண்டிருந்தது.

இந்த நிலையிலேயே தற்போது முதல் முறையாக ரெனால்ட் டஸ்டர் பிராண்டில் அந்த கார் காட்சியளித்துள்ளது. இதுவே இந்தியாவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது. மிகவும் அழகிய வாகனமாகவே புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டரை வடிவமைத்திருக்கின்றது. தனித்துவமான ரேடியேட்டர் கிரில், பேட்ஜை பெரிய அளவில் காண்பிக்கும் எழுத்துக்கள் அடங்கிய கிரில் இவை இரண்டே இந்த ரெனால்ட் டஸ்டரின் முகப்பிற்கு மிகப் பெரிய அழகான அணிகலன்களாக உள்ளன.

இதுதவிர தனித்துவமான ஹெட்லைட், பனி மின் விளக்கு மற்றும் ஏர் இன்டேக் ஆகியவையும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் புதிய டஸ்டரின் பின் மற்றும் பக்கவாட்டு பகுதிகளிலும் மிகப் பெரிய அளவிலான மாற்றங்களை ரெனால்ட் மேற்கொண்டிருக்கின்றது. இதுதவிர இன்னும் பல மேம்படுத்தல் செய்யப்பட்ட அம்சங்களையே இந்த காரில் ரெனால்ட் வழங்கி இருக்கின்றது.

அந்தவகையில், 7அங்குல விர்சுவல் டேஷ்போர்டு, 10.1 அங்குல தொடுதிரை மல்டி மீடியா சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல நவீன கால அம்சங்கள் புதிய தலைமுறை டஸ்டரில் இருக்கும் என உறுதியான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதேபோல், இட வசதியும் இந்த காரில் மிக தாராளமாக இருக்கும் என கூறப்படுகின்றது.

இதற்கேற்ப இப்போது புதிய தலைமுறை டஸ்டரின் நீளம் மற்றும் வீல் அளவுகள் பற்றி தெரிய வந்திருக்கின்றன. இதன் நீளம் 4343 மிமீ ஆகும். இதேபோல், இதன் வீல் பேஸ் 2657 மிமீட்டராக உள்ளது. உலக சந்தையில் இந்த கார் 1.0 டிசிஇ மோட்டார் மற்றும் 1.2 டிசிஇ மோட்டார் ஆகிய எஞ்சின் தேர்வுகளிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் இரண்டாவது எஞ்சினுடன் மைல்டு ஹைபிரிட் சிஸ்டமும் வழங்கப்படுகின்றது. இதற்காக 48 வோல்ட் ஸ்டார்டர் ஜெனரேட்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது இந்த எஞ்சின்களுடன் டஸ்டர் விற்பனைக்கு வர வாய்ப்பில்லை என்றே கூறப்படுகின்றது. மேலும், இந்தியாவிற்கான டஸ்டர் கார்கள் சென்னையில் வைத்தே தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் உற்பத்தி பணிகள் 2025 ஆம் ஆண்டின் அரையாண்டின் இறுதிக்குள் ரெனால்ட் தொடங்கிவிடும் என்று கூறப்படுகின்றது. ஆனால், இது தொடங்கப்படும் நாள் பற்றிய துள்ளிய தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்த கார் விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாளனாக மாறும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *