இந்தியாவில் முதல் பார்மா நிறுவனத்தை உருவாக்கிய ஜீனியஸ்..!!

பிரிட்டிஷ் இந்தியாவில், நிறைய இந்திய மேதாவிகள் தங்களுக்குக் கிடைத்த குறைந்த விஷயங்களைக் கொண்டு பல சாதனைகளைப் படைத்தனர்.
தங்களது ஆரம்பகால கல்வியை முடித்துவிட்டு மேற்கல்விக்காக வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றனர்.அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்தியாவின் முதல் பார்மாசூட்டிகல் கம்பெனியை நிறுவிய பிரபுல்ல சந்திர ரே. பெங்கால் கெமிக்கல் அண்டு பார்மாசூட்டிகல்ஸ் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார்.
அவர் நவீன இந்தியாவின் கெமிக்கல் ஆராய்ச்சியாளும் ஆசிரியரும் ஆவார். அவரை இந்திய கெமிஸ்ட்ரியின் தந்தை என்று அழைத்தனர். பிரிட்டிஷ் இந்தியாவின் பெங்கால் பிரசிடென்சியில் 1861 ஆம் ஆண்டு பிறந்தார். இப்போதைய வங்கதேசம்.
எ ஹிஸ்டரி ஆப் ஹிந்து கெமிஸ்ட்ரியின் நூலாசிரியர்.பிரபுல்ல சந்திர ரே கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். தனது 21 ஆவது வயதில் அவர் இங்கிலாந்து சென்றார். 1882 ஆம் ஆண்டில் அவருக்கு எடின்பரோ பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அதன் மூலம் அவர் மற்றொரு பட்டக்கல்வியை 1885 ஆம் ஆண்டில் முடித்தார்.
1887 ஆம் ஆண்டில் அவர் டிஎஸ்சியை முடித்தார்.கன்சுகேட்டடு சல்பேட்ஸ் ஆப் தி காப்பர் மெக்னீசியம் குரூப் என்ற தீசீஸை அவர் எழுதியதற்காக ஹோப் பிரைஸ் விருதை ரே பெற்றார்.அவரது டாக்டரேட்டை முடித்த பின்னர் மேலும் ஓராண்டுக்கு இது அவருக்கு ஆய்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது.
ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி அவருக்கு வாழ்நாள் மற்றும் உழைப்புக்கான கெமிக்கல் லேண்டுமார்க் பிளேக் விருதை வழங்கி கௌரவித்தது.1888 ஆம் ஆண்டில் பிரபுல்ல சந்திர ரே இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்.
கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் 1889 ஆம் ஆண்டு அசிஸ்டென்ட் புரபஸராகப் பணியில் சேர்ந்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அவர் வேலை பார்த்தபோது அங்கு ஒரு ரிசர்ச் லேபார்ட்டரியை நிறுவினார். அங்கு மாணவர் குழுவுடன் சேர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
ரே 150க்கும் மேற்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.கோயம்புத்தூர்-க்கு அடுத்த ஜாக்பாட்.. ஸ்பெயின் நிறுவனம் தமிழக அரசுடன் புதிய ஒப்பந்தம்..!! #IT பிரபுல்ல சந்திர ரே கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாமல் பிரமச்சாரியாகவே வாழ்ந்தார்.