மகா சிவராத்திரியின் மகிமை! சிவனை எப்படி கும்பிட்டால் வரம் சித்திப்பார்? தெரிந்து கொள்வோம்!

Maha Shivratri 2024: மஹா சிவராத்திரி, மாசி மாதத்தின் தேய்பிறை சதுர்தசி திதியில் கொண்டாடப்படும் நன்னாள் ஆகும். சிவ பக்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சிவராத்திரி திருநாளில், சிவனையும் பார்வதியையும் முறைப்படி வழிபடுவது இந்துக்களின் வழக்கம். இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா மார்ச் மாதம் எட்டாம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.

சிவநாமத்தின் மகிமை

சிவபெருமான் லிங்கமாக உருவமெடுத்த தின சிவராத்திரி நாளன்று, . நமசிவாய என்னும் மந்திரத்தை மனதில் நினைக்க எந்த தீமைகளும் நெருங்காது. ஏனென்றால், சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள்.

சிவராத்திரி நாளன்று, மாலை நேரத்தில் வீட்டின் பிரதான கதவின் இருபுறமும் விளக்குகளை ஏற்றி வைத்து சிவபெருமானை பிரார்த்தனை செய்யுங்கள். சிவபெருமானின் அருளால் உங்கள் வீடு எப்போதும் சுபிட்சத்துடன் இருக்கும்.

சிவராத்திரி வழிபாட்டின் முக்கியமான அம்சங்கள்

சிவராத்திரி உட்பட சிவனை துதிக்கும் எந்தவொரு நாளாக இருந்தாலும், நமசிவாய என்ற மந்திரத்த்தை உச்சரிப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. சிவனுக்கு அபிஷேகப்ரியன் என்ற பெயருண்டு. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், சிவனின் மனம் குளிரும். சிவனுக்கு அபிஷேகம் செய்தால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

சிவனுக்கு உகந்த சிவராத்திரிகளில் ஐந்து சிவராத்திரிகள் முக்கியமானவை. மகா சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி மற்றும் பட்ச சிவராத்திரி என்று அவற்றை வகைப்படுத்தலாம். இந்த ஐந்து சிவராத்திரிகளுக்கும் என்ன சிறப்பு? தெரிந்துக் கொள்வோம்.

மகா சிவராத்திரி

மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று மகாசிவராத்திரி அனுசரிக்கப்படுகிறது. “வருஷ சிவராத்திரி” என்ற பெயர் கொண்ட மகா சிவராத்திரியே சிவனுக்கு உண்டான விழாக்கள் மற்றும் விரதங்களில் முக்கியமானது.

யோக சிவராத்திரி :

திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளன்று சிவனுக்கு பூஜை புனஸ்காரம் செய்வதும், விரதம் இருப்பதும் சிறந்தது..

நித்திய சிவராத்திரி

வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை மற்றும் வளர்பிறை சதுர்த்தசி திதிகளுக்கு நித்திய சிவராத்திரி என்று பெயர். இவை மாதம் இரண்டு என்ற விகிதத்தில் வருபவை.

பட்ச சிவராத்திரி

தை மாத தேய்பிறை பிரதமை தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி விரதம் ஆகும்.

மாத சிவராத்திரி

மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும். மாதாமாதம் வரும் இந்த சிவராத்திரியன்று விரதம் இருந்தால் இறைவன் அருள் பெருகும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *