இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதே இலக்கு – இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் சபதம்
வருகின்ற 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடுவதே தனது முக்கிய இலக்கு என்று இந்திய அணிக்காக 2012ம் ஆண்டு அண்டர் 19 உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்று தற்போது அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாடி வருகிறார் உன்முக்த் சந்த்.
கடந்த மூன்று ஆண்டுகளாக உன்முக்த் சந்த், ஆண்டுக்கு 10 மாதங்கள் அமெரிக்காவில் தங்கி அங்கு கிரிக்கெட் விளையாடி வருகிறார். இதன்மூலம் அவர் அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாட தகுதி பெற்றுள்ளார். சமீபத்தில் கிரிக்பண்ணிடம் பேசிய உன்முக்த் சந்த், இந்தியாவுக்கு எதிரான விளையாடுவதே எனது முக்கிய குறிக்கோள் என்று பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘ இந்திய கிரிக்கெட் அணியின் இருந்து ஓய்வு பெற்றதில் இருந்து, இந்திய அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோளாக உள்ளது. இதை கெட்ட எண்ணத்திலோ, வேறு எந்த காரணத்திற்காகவே சொல்லவில்லை. இந்தியாதான் உலகின் சிறந்த அணி. அந்த அணியை எதிர்த்து விளையாடி எனது திறமையை வெளிக்காட்ட ஆசைப்படுகிறேன். ‘ என்று தெரிவித்தார்.
யார் இந்த உன்முக்த் சந்த்..?
இந்திய அணியின் முன்னாள் வீரர் உன்முக்த் சந்த் தலைமையில் 19 வயதுக்குட்பட்டோர் அணி கடந்த 2012ம் ஆண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அதன்பிறகு, உன்முக்த் சந்த் இந்திய அணியின் விராட் கோலிபோல் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.