பாதுகாப்பான நாடு என நிரூபிக்க சென்றவரை 9 மாதங்கள் சிறையில் தள்ளிய அரசாங்கம்

ஆப்கானிஸ்தான் ஒரு பாதுகாப்பான நாடு என நிரூபிக்க சென்ற ஆஸ்திரிய நாட்டவர், 9 மாத சிறை தண்டனைக்கு பின்னர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

சில முட்டாள்களும் வசிக்கிறார்கள்
ஆஸ்திரியாவை சேர்ந்த தீவிர வலதுசாரி கொள்கை கொண்ட 84 வயது Herbert Fritz என்பவரையே ஞாயிறன்று தலிபான்கள் விடுவித்துள்ளனர். கத்தார் விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியுள்ளதாகவும் ஆஸ்திரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானுக்கு பயணம் ஆபத்தை விளைவிக்கலாம் என ஆஸ்திரியா அரசாங்கம் எச்சரிக்கை விடுத்திருந்தும் கடந்த ஆண்டு மே மாதம் Herbert Fritz ஆப்கானிஸ்தான் சென்றுள்ளார்.

தமது கைது நடவடிக்கையை ஒரு மோசமான சூழல் என குறிப்பிட்ட அவர், மீண்டும் ஆப்கானிஸ்தான் செல்ல தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார். மிக அருமையான மக்கள் வசிக்கும் நாட்டில், சில முட்டாள்களும் வசிக்கிறார்கள் என தலிபான்களை சாடியுள்ளார்.

கத்தார் நாட்டின் நடவடிக்கை காரணமாகவே Herbert Fritz தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரிய நிர்வாகம் கத்தாருக்கு நன்றி தெரிவித்துள்ளது. சொந்த நாட்டுக்கு திரும்பும் முன்னர், கத்தாரில் மருத்துவ சோதனைகள் முன்னெடுக்கபடும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உளவு பார்த்ததாக சந்தேகம்
Herbert Fritz பொதுவாக ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார் என்றும் 1980களில் ஆப்கானிஸ்தான் செல்ல வேண்டும் என்றும், சமீப ஆண்டுகளில் கிழக்கு உக்ரைனுக்கு செல்வதை விரும்பினார் என்றும் Der Standard நாளேட்டில் குறிப்பிட்டுள்ளனர்.

தலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பனது தான் என்பதை நிரூபிக்கவே கடந்த ஆண்டு அங்கு சென்றுள்ளார். அத்துடன் தலிபான்களுடன் விடுமுறை கொண்டாட்டம் என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றும் வெளியிட்டிருந்தார்.

ஆனால் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் மிக விரைவிலேயே அவர் கைது செய்யப்பட்டார். துருக்கியில் தற்போது சிறை தண்டனை அனுபவிக்கும் குர்துகளின் தலைவர்களில் ஒருவரான Abdullah Ocalan என்பவரையும் Herbert Fritz முன்னர் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *