ஷார்ட்ஸுடன் வந்த மாப்பிள்ளை.! வித்தியாசமாக நடைபெற்ற நடிகர் அமீர் கான் மகளின் திருமணம்.! என்ன நடந்தது பார்த்தீங்களா!!
பாலிவுட் சினிமாவில் ஏராளமான சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் அமீர்கான்.
அமீர்கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தத் ஆகியோரின் மகள் ஐரா கான். அவரும் ஃபிட்னஸ் டிரெய்னரான நுபுர் ஷிகாரேவும் காதலித்து வந்தனர்.
அவர்களது காதலுக்கு இரு குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்து நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து ஐரா கான், நுபுர் ஷிகாரேவின் திருமணம் மும்பை
பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட்டிஸில் நடைபெற்றது. திருமணத்திற்கு மாப்பிள்ளை நுபுர் ஷிகாரே ஷார்ட்ஸ் அணிந்து வந்துள்ளார்.
அதாவது உடற்பயிற்சியாளரான அவர் சான்டா க்ரூஸ் பகுதியில் இருந்து திருமணம் நடைபெறும் பந்த்ரா பகுதிக்கு ஏறக்குறைய 8 கி.மீ ஓடியே வந்துள்ளார். மேலும் அதே ஆடையுடனே அவர்கள் திருமண ஒப்பந்தமும் செய்துள்ளனர். மிகவும் எளிமையாகவும், வித்தியாசமாகவும் நடைபெற்ற நடிகர் அமீர்கான் மகளின் திருமணம் அனைவரையும் கவர்ந்துள்ளது.