திருமணத்திற்கு விமானத்திலிருந்து குதித்து என்ட்ரி கொடுத்த மணமகன்… திகைத்துப்போன மணமகள்… வைரல் வீடியோ!
திருமணம் என்பது மனித வாழ்வின் முக்கியமான ஒரு பகுதி. மனித வாழ்க்கையை திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என்று கூட பிரித்துக்கொள்ளலாம். அந்த அளவுக்கு திருமணம் மனிதர்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய சிறப்பான நிகழ்வை மேலும் சிறப்பூட்டும் விதமாக பல ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.
குறிப்பாக பிரம்மாண்ட திருமண மண்டபங்கள், சிறந்த உணவு வகைகள், மேடை அலங்காரம், விலையுயர்ந்த ஆடைகள், திருமணத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு ரிட்டன் கிஃப்ட், இசை, கச்சேரி என என்னற்ற சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.
சமீப காலமாக திருமணத்திற்கு வித்தியாசமான என்ட்ரி கொடுப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. தங்களது வாழ்க்கையின் முக்கியமான நாளை உற்சாகமாக தொடங்க மணமகன்களும், மணமகள்களும் வித்தியாசமாக என்ட்ரி கொடுத்து வருகின்றனர். இத்தகைய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன.
அந்த வகையில் சமீபத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனது திருமணத்திற்கு கொடுத்த என்ட்ரி இணையத்தில் வைரலானது. முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சாகசத்துடன் கூடிய மணமகன் என்ட்ரி கொடுத்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார். கனடாவை சேர்ந்த கிறிஸ் பார்க் என்பவர் தனது திருமண தினத்தன்று தனது மாப்பிள்ளை தோழர்களுடன் இணைந்து ஸ்கை டைவிங் செய்து என்ட்ரி கொடுத்துள்ளார்.
https://www.instagram.com/reel/Cug-Grsqf4h/?utm_source=ig_web_copy_link
அப்கானிஸ்தானில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தனது காலை இழந்தார் கிறிஸ். இவர் தனது திருமணத்தில் விமானத்திலிருந்து ஸ்கை டைவ் செய்து என்ட்ரி கொடுப்பதற்காக சுமார் 6 மாதங்கள் பயிற்சி எடுத்துள்ளார். 6 மாத பயிற்சிக்கு பிறகு விமானத்தில் இருந்து குதித்து மாஸாக என்ட்ரி கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர்கள் கின்னஸ் உலக சாதனைக்கு முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.