முடி ரொம்ப கொட்டுதா கத்தையா வளர இந்த விதை மட்டும் போதும்
வெந்தைய விதை நீரின் நன்மைகள் : மோசமான வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம், மாசுபாடு ஆகியவை உடல் ஆரோக்கியம் மற்றும் சருமத்தைப் பாதிப்பது மட்டுமின்றி, கூந்தல் தொடர்பான சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தக் கூடும்.
இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு நபரும் முடி உடைதல், உதிர்தல் போன்றவற்றால் அவதிக்குள்ளாகின்றனர். கோடை காலத்தில் இந்த பிரச்சனை இன்னும் தீவிரமடையக் கூடும். வியர்வை, பிசுபிசுப்பு தன்மை, பொடுகு, அரிப்பு போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இந்த முடி பிரச்சனைகளில் இருந்து விடுபட, மக்கள் பல வகையான ஷாம்புகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அவற்றில் ரசாயனங்கள் இருப்பதால், அவை நன்மைகளுக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். முடி உதிர்தல் மற்றும் உடைதல் போன்ற பிரச்சனைகளுடன் நீங்களும் போராடிக் கொண்டிருந்தால், உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வீட்டு வைத்தியம் உள்ளது. இந்த செய்முறையைப் பின்பற்ற, நீங்கள் வெந்தய நீரை தலைமுடியில் தடவலாம். இதன் மூலம் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
வெந்தய தண்ணீரை தலைமுடிக்கு தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன:
வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்பு போன்ற பல ஊட்டச்சத்துக்கள்
(Fenugreek Water For Hair Growth) காணப்படுகின்றன. இவை முடி உடைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், கூந்தலை அடர்த்தியாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கவும் உதவும். வெந்தய விதையில் உள்ள இரும்புச்சத்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் முடியை உள்ளே இருந்து வலிமையாக்குகிறது, மேலும் இது பொடுகை நீக்க உதவுகிறது.
இப்போது கூந்தலுக்கு வெந்தயம் தண்ணீர் தயார் செய்வது எப்படி என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள்:
தேவையான பொருட்கள்:
வெந்தயம் 50 கிராம்
ஒரு கிளாஸ் தண்ணீர்
முடி எண்ணெய் 5 முதல் 6 சொட்டுகள்
செயல்முறை:
* முதலில், ஒரு பெரிய கிண்ணத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றவும்.
* இந்த தண்ணீரில் வெந்தயத்தை போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
* காலையில், வெந்தயத்தை தண்ணீரில் இருந்து வடிகட்டி, ஒரு தனி பாத்திரத்தில் எடுக்கவும்.
* இப்போது இந்த தண்ணீரில் சில துளிகள் முடி எண்ணெய் (Hair Oil) சேர்க்கவும்.
* இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமித்து வைக்கவும்.
கூந்தலில் எப்படி பயன்படுத்துவது?
வெந்தயத் தண்ணீரை கூந்தலில் பயன்படுத்துவதற்கு முன்பு கட்டாயம் தலைமுடிக்கு ஷாம்பு செய்யவும். கூந்தலில் ஷாம்பு போட்டு சுத்தம் செய்து, பின்பு வெந்தய தண்ணீர் பயன்படுத்தினால் அந்தத் தண்ணீர் வேர்களை சரியாக சென்றடையும். முடியை வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கவும். அதன் பிறகு அதில் வெந்தயத் தண்ணீரை தெளிக்கவும். குறைந்தது 1 மணி நேரமாவது முடியை இந்த தண்ணீர் கொண்டு ஊற வைக்கவும். இதற்குப் பிறகு, தலைமுடியை தண்ணீரால் கழுவவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி.