கொடூரத்தின் உச்சம்.. தாய் உயிரிழந்த தருவாயிலும் வராத பிள்ளைகள்.. போலீஸ் கூப்பிட்டும் அலட்சியம்.!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் குமுளி அட்டப்பள்ளம் காலனியில் தனியாக வசிக்கும் விதவைத் தாய் உயிருக்குப் போராடியும் பெற்ற பிள்ளைகள் உதவிக்கு வராததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விசாரணையில் அவரது பெயர் அன்னக்குட்டி என்பதும், அவருக்கு 55 வயதில் ஷாஜி என்ற மகனும், சிஜி என்ற மகளும் இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரது மகன் ஷாஜியை போலீசார் பலமுறை போனில் தொடர்பு கொண்டபோது நாய்க்கு உணவளிப்பதால் வர முடியவில்லை என அவர் கூறிய பதிலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சில மணி நேரங்கள் ஆகியும் மூதாட்டி உயிரிழந்தும், அவர் பெற்ற பிள்ளைகள் வராததால், மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர் மற்றும் போலீஸார் இணைந்து இறுதிச் சடங்குகளை செய்தனர்.
அடக்கம் செய்வதற்கு முன், பேருந்து நிலைய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னக்குட்டியின் உடலுக்கு கிராம மக்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அவரது மகன் ஷாஜி கூட்டத்துடன் சேர்ந்து தனது தாயின் உடலை தூரத்தில் பார்த்ததாக கூறப்படுகிறது. இவர் கேரள வங்கி ஊழியர். மகள் பஞ்சாயத்தில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இதில் தாயாரின் நிலம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது தெரியவந்தது.
வயதான தாயை கவனிக்காமல் கைவிட்டு சென்ற மகன் மற்றும் மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இருவரின் பணியையும் பறிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.