இந்திய ராணுவம் கெத்து காட்டப்போறாங்க! தேஜஸ் உள்ளிட்ட விமானங்கள் பண்ண போற செம வேலை!
குடியரசு தின விழாவை ஒட்டி இந்திய ராணுவத்தினர் சார்பில் அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான விமானங்கள் எல்லாம் பங்கேற்கப் போகின்றன. முக்கியமாக தேஜஸ் விமானம் இதில் பங்கேற்க போகிறது. இப்படியாக குடியரசு தின விழா அணிவகுப்பில் நடக்கப் போகும் முக்கியமான விஷயங்களை பற்றி தான் நாம் இங்கே காண போகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26 ஆம் தேதி இந்தியாவில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடக்க உள்ள 75 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த நிகழ்வின் போது இந்திய ராணுவத்திற்கு சொந்தமான விமானங்கள் எல்லாம் அணிவகுப்பில் கலந்து கொள்ள உள்ளன. இது குறித்து அறிவிப்பை இந்திய ராணுவத்தினர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர்.
இந்த அணிவகுப்பின் போது இந்திய விமானப்படைக்கு சொந்தமான 51 விமானங்கள் பங்கேற்க உள்ளன அதில் 29 விமானங்கள் பைட்டர் விமானங்களாகவும் 8விமானங்கள் சரக்கு போக்குவரத்துக்காக பயன்படுத்தும் விமானங்களாகவும் 13 ஹெலிகாப்டர்களாகவும் இதில் பங்கேற்க உள்ளன. இது இந்தியாவின் ராணுவ பலத்தை காட்டுவதற்காக நடத்தப்படும் அனுபவமாக பார்க்கப்படுகிறது. இந்த அணிவகுப்பு 1971 இல் பாகிஸ்தானுடன் போரில் டாங்கில் பகுதியில் நடந்த ஏர் டிராப் நிகழ்ச்சியை பறைசாற்றும் விதமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக இந்த குடியரசு தின விழா அணிவகுப்பில் சி295 போக்குவரத்து ஏர்கிராஃப்ட் பயன்படுத்தப்படும் என இந்திய விமானப்படை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் குறித்த அணி வகுப்பும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங்கள் எல்லாம் பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணிவகுப்பில் முக்கியமாக மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் எல்சிஹெச் பிராசந்த் என்ற ஹெலிகாப்டரும் பினாக்கா மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சிரும், நேக் ஆண்ட்டி டேங்க் மிசைல் உள்ளிட்ட ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிஸ் லிமிடெட் மூலம் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதாகும்.
இதில் எல்சிஎச் பிராசந்த் என்ற ஹெலிகாப்டர் தரையில் இருந்தும் அதே நேரம் வானில் பறந்து கொண்டே தாக்குதல்களை செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மார்டனான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆயுதங்களை ஏந்திய ஹெலிகாப்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தாக்குதல் நடத்தும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த எல்சிஎச் பிராசந்த் ஹெலிகாப்டரில் அட்வான்ஸ்டுடான நேவிகேஷன் சிஸ்டம், குளோஸ் காம்பெக்ட் துப்பாக்கிகள், ஏர் டு ஏர் மிசயல் என இந்தியாவின் அட்வான்ஸ்டு கோம்பட் ஏவியேஷனாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் ஏகப்பட்ட ராணுவ ஆயுதம் தாங்கிய வாகனங்கள் எல்லாம் இதில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் இந்திய ராணுவத்தினர் பயன்படுத்தும் வாகனங்களாக உள்ளன.
முக்கியமாக டி 90 டேங்க், பிஎம்பி-2 இன்ஃபான்டரி காம்பெக்ட் வாகனம், டுரோன் ஜாமர்கள், அட்வான்ஸ்டான சர்வாத்ரா பாலம், மீடியம் ரேஞ்ச் தரையில் இருந்து விண்ணில் பாயும் மிசயல் லாஞ்சர், மல்டி ஃபங்ஷன் ரேடார் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட சுவாதி என்ற ஆயுதங்களை கண்டுபிடிக்கும் ரேடார் ஆகிய காட்சிப்படுத்தப்படுகின்றன.
ஹெலிகாப்டர்களை பொறுத்தவரை இலகு ரக காம்பெக்ட் ஹெலிகாப்டர் ஆயுதம் பொருத்தப்பட்ட ஏஎல்எச் துருவ் ஹெலிகாப்டர், பினாகா ராக்கெட் சிஸ்டம், சுவாதி ரேடார், ஆகியன காட்சிப்படுத்தப்படுகிறது இவை எல்லாம் டிஆர்டிஓ வெற்றிகரமாக தயாரித்து இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் ஆயுதம் தாங்கிய வாகனங்களாகும்.