படத்துக்கு போன இன்டர்வல் வரதுக்குள்ள வண்டி ரெடினு போன் வந்திடும்! எக்ஸ்பிரஸ் கேர் சர்வீஸை தொடங்கிய ஏத்தர்!
ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம் எக்ஸ்பிரஸ் கேர் சர்வீஸ் (ExpressCare Service) சேவை திட்டத்தை இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சர்வீஸுக்கு விடப்படும் வாகனங்களை 60 நிமிஷத்திற்கு சர்வீஸ் செய்து திரும்பி அதன் வாடிக்கையாளரிடமே ஒப்படைப்பதற்கான திட்டத்தையே அது நாட்டில் தொடங்கி வைத்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் பொருட்டு பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில், சிறப்பு கேஷ்பேக், விலை தள்ளுபடி, குறிப்பிட்ட நாட்களுக்கு இலவசாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி, சந்தா திட்டங்களை இலவசமாக வழங்குவது உள்ளிட்ட திட்டங்களை அவை அறிவித்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையிலேயே கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனம், வாடிக்கையாளர்களை தன் வசம் ஈர்க்கும் பொருட்டு எக்ஸ்பிரஸ் கேர் சர்வீஸ் (ExpressCare Service) திட்டத்தை நாட்டில் தொடங்கி வைத்திருக்கின்றது. இந்த திட்டத்தின்படி, சர்வீஸுக்கு விடப்படும் வாகனத்தை வெறும் 60 நிமிடங்களுக்கு உள்ளாக சர்வீஸ் செய்து மீண்டும் வாடிக்கையாளரிடமே ஒப்படைக்கப்பட இருக்கின்றது.
முதல்கட்டமாக நாட்டின் 11 முக்கிய நகரங்களில் 20 எக்ஸ்பிரஸ்கேர் சர்வீஸ் மையங்களே தற்போது திறக்கப்பட்டு உள்ளன. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் இந்த எண்ணிக்கையை 50 ஆக உயர்த்தவும் நிறுவனம் பிளான் போட்டு இருக்கின்றது. மிக வேகமாக சர்வீஸ் செய்து வழங்கப்பட்டாலும் மிகவும் குவாலிட்டியான சர்வீஸே இந்த சேவையின்கீழ் செய்து வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.
மேலும், அளவிடப்பட்ட இந்த நேரத்தைத் தாண்டி அதிக நேரத்தை தாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் ஏத்தர் எனெர்ஜி கூறி இருக்கின்றது. விரைந்து சர்வீஸ் செய்துக் கொடுப்பதற்காக ஒவ்வொரு எக்ஸ்பிரஸ்கேர் சர்வீஸ் மையங்களிலும் இரண்டு கை தேர்ந்த நிபுணர்கள் பணியமர்த்தப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாடிக்கையாளர்களின் நேரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கிலேயே இந்த எக்ஸ்பிரஸ் கேர் சர்வீஸ் திட்டத்தை ஏத்தர் எனெர்ஜி தொடங்கி இருக்கின்றது. பலர் தங்களின் வருமானத்திற்காக தங்களுடைய இருசக்கர வாகனத்தையே நம்பி இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலில் சர்வீஸுக்கு ஒன்றிரண்டு நாட்களை சர்வீஸ் மையங்கள் எடுத்துக் கொள்வது சரியாக இருக்காது என்கிற நோக்கிலும் ஏத்தர் அதன் விரைந்து சர்வீஸ் செய்து தரும் மையங்களை திறக்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.
முன்பதிவு செய்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாமதத்தை தவிர்க்க இது பெரும் உதவியாக இருக்கும். அத்துடன், ரூ. 125 முதல் ரூ. 150 வரையில் பிரீமியம் கட்டணத்தின் அடிப்படையிலேயே இந்த சேவையை ஏத்தர் வழங்கிக் கொண்டிருக்கின்றது. சோதனையோட்டமாக தொடங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்க ஆரம்பித்து இருக்கின்றது.
இந்த நிலையிலேயே இதனை தற்போது நாடு முழுவதும் செயல்படுத்தும் பணியில் ஏத்தர் களமிறங்கி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின்கீழ் ஏத்தர் 450 அபெக்ஸ், ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ஏத்தர் 450எஸ் ஆகிய மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.
இதில் ஏத்தர் 450 அபெக்ஸ் மாடலே சமீபத்தியே அறிமுகமாக இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 1.88 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மேலும், இது குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
ஆனால், துள்ளியமாக எத்தனை யூனிட்டுகள் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றன என்பது துள்ளியமாக அறிவிக்கப்படவில்லை. இப்போது வெளியாகி இருக்கும், ஏத்தர் 450 அபெக்ஸ் 8 முதல் 9 மாதங்கள் வரை மட்டுமே விற்பனையில் இருக்கும் என தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழு சார்ஜில் 157 கிமீ ரேஞ்ஜை வழங்கும் என தெரிவித்து இருக்கின்றது. இதற்காக 3.7 kWh பேட்டரி பேக் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.