பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஜாக்பாட்.. இந்த காரையா கொடுத்திருக்காங்க… இதோட விலை எவ்வளவு தெரியுமா?
சமீபத்தில் பிக்பாஸ் 7 டைட்டிலை அடித்துச் சென்ற அர்ச்சனாவிற்கு 50 லட்ச ரூபாய் ரொக்கமும், ஒரு வீடும் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன், சேர்த்து மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பிரீமியம் தர கார் மாடல் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது. கிராண்ட் விட்டாரா (Grand Vitara) எஸ்யூவி ரக காரே பரிசாக அவருக்கு வழங்கப்பட்டது.
அதன் விலை ரூ. 10.70 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில் இந்த கார் மாடலின் அதிகபட்ச விலை ரூ. 19.92 லட்சமாக உள்ளது. இத்தகைய விலை உயர்ந்த காரே அர்ச்சனாவிற்கு பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, பாலிவுட் பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கும் மிக மிக விலை உயர்ந்த கார், பெரிய பரிசு தொகை உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தி பிக் பாஸ் 17-இன் டைட்டில் வின்னராக முனவர் ஃபருக் அறிவிக்கப்பட்டு இருக்கின்றார்.
இவருக்கும் அர்ச்சனாவிற்கு வழங்கப்பட்டதைப் போல ரூ. 50 லட்சம் ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடனேயே விலை உயர்ந்த கார் ஒன்றும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி (Hyundai Creta SUV) காரே பிக் பாஸ் 17 டைட்டில் வின்னருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கிரெட்டாவின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை சமீபத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுகமாக ரூ. 10.99 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.
மிகவும் அழகிய மற்றும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட காராக புதிய கிரெட்டா உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், அட்வான்ஸ்டு ப்ளூ லிங்க் இணைப்பு போன்ற நவீன கால அம்சங்கள் பல இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக 70க்கும் மேற்பட்ட கார் இணைப்பு வசதியை புதிய கிரெட்டாவில் பெற்றுக் கொள்ள முடியும்.
எஞ்சின் ஸ்டார்ட் – ஸ்டாப், டோர் லாக் – அன்லாக், வாகனம் சார்ந்த அலர்ட்டுகள் என ஏகப்பட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்துடனேயே, லெவல் 2 வகை அடாஸ் தொழில்நுட்பமும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, கூடுதல் பிரீமியம் அம்சங்களாக தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவையும் ஃபேஸ்லிஃப்ட் கிரெட்டாவில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்தகைய சூப்பரான கார் மாடலே பிக்பாஸ் 17 டைட்டில் வின்னருக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. புதிய கிரெட்டா ஒட்டுமொத்தமாக 7 விதமான வேரியண்ட்களில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, இ (E), இஎக்ஸ் (EX), எஸ் (S), எஸ் ஓ (S O), எஸ்எக்ஸ் (SX), எஸ்எக்ஸ் டெக் (SX Tech) மற்றும் எஸ்எக்ஸ் ஓ (SX O) ஆகும். மோட்டாரிலும் 3 விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
1.5 லிட்டர் நேச்சுரல் பெட்ரோல், 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் ஆகியவையே அவை ஆகும். இந்த மோட்டார்களுடன் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களாக 6 எம்டி, 6 ஐஎம்டி, 7 டிசிடி ஆகியவை வழங்கப்படுகின்றன. இத்தகைய சூப்பரான வசதிகள் கொண்ட காரையே பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு தற்போது பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.