லண்டன் மக்களை நடுங்க வைத்த சம்பவத்தில் முக்கிய திருப்பம்: அதிகாரிகள் வெளியிட்ட சந்தேகம்

கடந்த வாரம் லண்டனில் அமில வீச்சில் ஈடுபட்ட புலம்பெயர் நபர் தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
அமில வீச்சு சம்பவம்
கடந்த வெள்ளிக்கிழமை புலம்பெயர் நபர் ஒருவர் அமில வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதில் பலர் காயங்களுடன் தப்பினர். குறித்த நபர் ஆப்கானிஸ்தான் நாட்டவர் என்றும், இருமுறை புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியானது.
அப்துல் எஸேதி என அடையாளம் காணப்பட்ட அந்த நபர் அமில வீச்சு தாக்குதலுக்கு பின்னர் தலைமறைவானார். ஆனால் தற்போது அவர் தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு ஆதாரங்களுடன் தகவல் வெளியிட்டுள்ளது.
அமில வீச்சில் பாதிக்கப்பட்ட அந்த இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒரு கண்ணில் பார்வை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். எஸேதி தொடர்பான இந்த வழக்கு தற்போது அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தேம்ஸ் நதிக்குள் குதித்திருப்பார்
இருமுறை புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால், அவருக்கு புகலிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துடன் அவர் துஸ்பிரயோக குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டவர் என தெரியவந்தும் அவருக்கு புகலிடம் அளிக்கப்பட்டுள்ளதும் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளை குறிப்பிட்டு, எஸேதி மேற்கு லண்டனில் உள்ள பாலத்தில் இருந்து தேம்ஸ் நதிக்குள் குதித்திருப்பார் என்று சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
மேலும், அந்த பாலத்தில் இருந்து அவர் திரும்பும் காட்சிகள் எதும் பதிவாகாத நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றே பொலிஸ் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டவரான எஸேதி 2016ல் சரக்கு லொறி ஒன்றில் பதுங்கி பிரித்தானியாவில் நுழைந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. அதன் பின்னர் இருமுறை புகலிடக்கோரிக்கை அவருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது என்றே கூறப்படுகிறது.