பிய்ந்து போன ஷூவிற்காகவும் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காகவும் கடைக்காரருக்கு நோட்டீஸ் அனுப்பிய வழக்கறிஞர்! அடுத்து நடந்தது என்ன?

உத்தரபிரதேச மாநிலத்தின் ஃபேத்பூர் மாவட்டத்தில் வினோதமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஞானேந்திர பான் திரிபாதி என்ற வழக்கறிஞர், தனது உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சல்மான் ஹூஸைன் என்பவரின் கடையிலிருந்து ஷூ ஒன்று வாங்கியிருக்கிறார்.

ஆனால் இந்த ஷூ பிய்ந்து போனதால் தன்னால் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் இதனால் தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாகவும் அதற்காக கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமணையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறி, இதற்கெல்லாம் காரணம் அந்த ஷூக்கடைக்காரர் தான் என அவர் மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் திரிபாதி. அதுமட்டுமின்றி தான் வாங்கிய ஷூவிற்கான பணத்தையும் தனது மருத்துவ செலவிற்கான பணத்தையும் கேட்டு இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார்.

நான் இந்த ஷூவை வாங்கும் போது, இது பிரபலமான பிராண்ட் என்றும் ஆறு மாதம் வாரண்டி உண்டு என்றும் கடைக்காரர் கூறினார். அவருடைய வார்த்தையை முழுதாக நம்பி இந்த ஷூவை வாங்கினேன். ஆனால் வாங்கி வந்த ஆறாவது நாளே ஷூ பிய்ந்து போய்விட்டது. இதனால் என் நெருங்கிய உறவினரின் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டது எனக் கூறும் திரிபாதி, தனக்கு இழப்பீடு தராவிட்டால் அந்தக் கடைக்காரர் கடுமையான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறார்.

ஜனவரி 19-ம் தேதி அதிகாரப்பூர்வமாக சல்மான் ஹூஸைனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் ஞானேந்திரா திரிபாதி. அதில் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மருத்துவ செலவிற்காக பத்தாயிரம் ரூபாயும், பதிவேடு கட்டணமாக ரூ.2100 மற்றும் ஷூ வாங்கிய பணம் ரூ.1200 என மொத்தம் ரூ.13,300 தர வேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்துள்ள சல்மான், அவர் என்னிடம் ஷூ வாங்கியது உண்மைதான். அந்த ஷூ பிரபலமான பிராண்ட் என்பதோடு ஆறு மாத வாரண்டியும் உள்ளது. மேலும் 50 சதவிகித தள்ளுபடியில்தான் அவர் என்னிடம் ஷூ வாங்கினார். நிச்சியம் அந்த ஷூ ஆறு மாதத்திற்குள் பிய்ந்து போக வாய்ப்பில்லை. என்னை வேண்டுமென்றே இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளார். அவர் கூறும் குற்றச்சாட்டுகள் எதற்கும் ஆதாரம் இல்லை என தன் பக்க நியாயத்தைக் கூறுகிறார்.

இதற்கிடையில், தன்னுடைய வங்கி கணக்கில் வெறும் ரூ.41 மட்டுமே இருந்த பெண், டெல்லியில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் 15 நாள் தங்கியிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தங்கியிருந்ததற்கான கட்டணம் மட்டுமே ரூ.6 லட்சம் வந்துள்ளது. ஆனால் போலி அடையாள அட்டை காண்பித்து, கட்டணம் கட்டுவதிருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். மேலும் போலியான ஐசிஐசிஐ வங்கி யுபிஐ மூலம் பணம் செலுத்திவிட்டதாகவும் கூறி அவர் ஏமாற்றியுள்ளார். ஜான்சி ராணி சாமுவேல் எனப் பெயர் கொண்ட இவர், ஜனவரி 13-ம் தேதி டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *