இந்த ராசியினரின் காதல் நிலையில்லாததாம்… எந்தெந்த ராசின்னு தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் ஒரு உண்மையான உறவு நமக்காக இருக்க வேண்டும் என்ற ஆசை நிச்சயமாக இருக்கும்.
ஆனால் அப்படியொரு உறலு சுலபமாக எல்லோருக்கும் கிடைத்துவிடாது. உண்மையான அன்பை பெற்றுவிட வேண்டும் என்று போராடுபவர்கள் தான் இவ்வுலகில் அதிகம் என்றால் மிகையாகாது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் சிலர் எப்போதுமே உறவைப் பற்றிக் குழப்பத்தில் இருப்பார்கள், யாருடனும் நீண்ட உறவைப் பேண முடியாமல் விரைவில் உறவை முடித்துக் கொள்கிறார்கள்.
இவர்களுக்கு பிரிவை சந்திப்பது வாழ்வில் பல முறை இடம்பெறுகின்றது. இப்படி நிலையில்லாத காதல் உறவால் வாழ்வில் பல முறை பிரிவை சந்திக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
இந்த ராசியை சேர்ந்தவர்கள் மிகவும் கோபமாக இருப்பார்கள். மேலும், சிறிய விஷயங்களுக்கு கூட உடனடியாக கோபப்படும் இயல்புக்கு பெயர் பெற்றவர்கள்.
அவர்கள் கோபத்தின் விளைவுகளைப் பற்றி அதிகம் சிந்திப்பதில்லை. அவர்கள் உருவாக்கும் உறவுகளும் அப்படித்தான்.
அவர்களின் ஆர்வம் பெயரிட முடியாதது என்றாலும், சில நேரங்களில் அது அவசர முடிவுகளுக்கு வழிவகுக்கிறது.இது பெரும்பாலும் அவர்களின் துணையிடம் இருந்து பிரிவதற்கு வழிவகுக்கிறது.
மிதுனம்
இந்த ராசியினர் பட்டாம்பூச்சி போன்று சுதந்திரமாக இருக்கவே விரும்புகின்றனர். அவர்கள் வண்ணமயமான கனவுகளை காண்கிறார்கள். எப்போதும் கற்கனை உலகத்திலேயே இருக்கும் தன்மை இவர்களிடம் காணப்படும்.
அவர்கள் எப்போதும் மாற்றத்திற்காக ஏங்குகிறார்கள். இது அவர்கள் எளிதில் சலிப்படையச் செய்வதால், நிலையான, நீண்ட கால உறவுகளைப் பேணுவது அவர்களுக்கு சவாலாக அமைகிறது.அவர்கள் புதிய அனுபவங்களை விரும்புகிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர் இயல்பாகவே வசீகரமான தோற்றமுடையவர்களாக இருப்பார்கள். அதனால் அனைவராலும் விரைவாக ஈர்கக்ப்படுவார்கள்.
இநத ராசியினர் சில நேரங்களில் தங்கள் ஆசையை நிறைவேற்றிக்கொள்வதற்காக தங்கள் துணையின் தேவைகளை கூட புறக்கணித்து விடுவார்கள். இதுவே அவர்கள் உறவுகளிடமிருந்து பிரிவதற்கு காரணமாகிவிடும்.