அரசியல் எண்ட்ரிக்கு முன் தளபதி விஜய் வாங்கிய சொகுசு கார் – ஆத்தாடி அதன் விலை மட்டும் இத்தனை கோடியா?

கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுள் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிக்க அவர் ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், சினிமாவை விட்டு விலக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அரசியல் பணிகளில் ஈடுபட உள்ளதால் அடுத்ததாக எந்த படத்திலும் கமிட்டாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியலுக்கு வரும் முன்னர் பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வருவதோடு, தன்னுடைய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடனும் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார் விஜய்.

நடிகர் விஜய் தற்போது தனது அரசியல் எண்ட்ரிக்கு முன் புதிதாக சொகுசு கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் i7 xDrive 60 எலெக்ட்ரிக் ரக காரான அதன் மதிப்பு ரூ.2 முதல் ரூ.2.30 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த ரக கார்கள் வெகு சிலரிடம் மட்டுமே உள்ளது. அந்த எலைட் லிஸ்ட்டில் தற்போது தளபதி விஜய்யும் இணைந்திருக்கிறார். இதுதவிர எக்கச்சக்கமான சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார் நடிகர் விஜய்.

அவருக்கு கார்கள் என்றால் அலாதி பிரியம். அதனால் அடிக்கடி புதுகார் வாங்குவதை பழக்கமாக வைத்துள்ள விஜய்யிடம் ஏற்கனவே ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், மினி கூப்பர் எஸ், ஆடி ஏ8 உள்பட பல பாரின் கார்கள் உள்ள நிலையில், அந்த பட்டியலில் BMW i7 xDrive 60 எலெக்ட்ரிக் காரும் புதிதாக இணைந்துள்ளது. நடிகர் விஜய் வாங்கி உள்ள முதல் எலெக்ட்ரிக் மாடல் கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. இனி ரோல்ஸ் ராய்ஸுக்கு ரெஸ்ட் விட்டு இந்த காரில் தான் வலம் வரப்போகிறார் தளபதி விஜய்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *