ஹோட்டல் ரூமில் இருந்த முக்கிய ஆதாரம்.. மகனை கொலை செய்த பெண் சிஇஓ சிக்கியது இப்படித்தான்

பெங்களூர்: ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுசனா சேத் தனது 4 வயது மகனை கொல்ல முன்கூட்டியே திட்டமிட்டிருந்ததற்கு ஆதாரம் இருப்பதாக கோவா போலீஸார் தெரிவித்திருந்தனர்.

 

ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருப்பவர் சுசனா சேத். இவர் Mindful AI lab என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ ஆக பணியாற்றி வருகிறார்.

2021 ஆம் ஆண்டு சிறந்த புத்திசாலித்தனமான பெண்களில் ஒருவர் என்ற விருதும் பெற்றவர். இந்த நிலையில் கடந்த வாரம் கோவா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள இருக்கும் சர்வீஸ் அபார்ட்மென்ட் ஒன்றில் சுசனா சேத் தனது 4 வயது மகனுடன் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.

இந்த நிலையில் இரு நாட்கள் கழித்து வேலை நிமித்தமாக தான் பெங்களூர் செல்ல வேண்டும். அதற்காக ஒரு வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து தரும்படி அபார்ட்மென்ட் ஊழியர்களிடம் சுசனா சேத் கேட்டுள்ளார். சர்வீஸ் அபார்ட்மென்ட் ஊழியர்கள், கால் டாக்ஸியை விட விமானத்தில் சென்றால் வசதியாக இருக்குமே என ஊழியர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு சுசனா சேத் இல்லை தனக்கு கார்தான் வேண்டும் என அடம்பிடித்துள்ளார். இதையடுத்து ஊழியர்களுக்கு அவருக்கு வாடகை காரை ஏற்பாடு செய்து கொடுத்தனர். இந்த காரில் சுசனா சேத் பெங்களூர் புறப்பட்டு சென்றார். இதனிடையே கோவாவில் அவர் தங்கியிருந்த அறையை ஊழியர்கள் சுத்தம் செய்தனர்.

அப்போது அங்கு ஒரு டவல் முழுவதும் ரத்த கறை இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்களுக்கு அப்போதுதான் நினைவுக்கு வந்தது. இங்கிருந்து பெங்களூர் சென்ற சுசனா சேத் தன்னுடன் 4 வயது குழந்தையை அழைத்து வந்தாரே. ஆனால் போகும் போது குழந்தை இல்லாமல் அவர் மட்டும் சென்றாரே என யோசிக்க தொடங்கியுள்ளனர்.

இதையடுத்து ரத்தக் கறையை பார்த்ததும் ஏதோ அசம்பாவிதம் நடந்துள்ளதை அறிந்து சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் சுசனா சேத்திடம் கோவா போலீஸார் விசாரணை நடத்தினர். அதற்கு அவரோ அந்த டவலில் இருந்த ரத்த கறை எனது மாதவிடாய் ரத்தக் கறை என பொய் சொல்லியுள்ளார்.

மேலும் சரி உங்களுடன் வந்த 4 வயது மகன் எங்கே என கேட்ட போது தனது நண்பர் வீட்டில் இருப்பதாக கூறி ஒரு முகவரியை கொடுத்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *