லீவ் கொடுக்காத மேனேஜர்.. வேலையை உதறி தள்ளிய ஊழியர்.. வைரலாகும் வாட்ஸ் அப் சாட்!
ஊழியர் ஒருவர் தனது மேலாளரிடம் பேசிய வாட்ஸ் அப் சாட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஊழியர் ஒருவர் தனது மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார் அதற்கு அவர் அளித்த பதிலை கேட்டு ஊழியர் வேலையை விட்டே சென்றுள்ளார். அப்படி என்ன சொன்னார், அந்த வாட்ஸ் அப் சேட்டில் என்னதான் உள்ளது என்பதை பார்க்கலாம்.
ஊழியர் ஒருவர் தனது மேலாளரிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், தன்னால் பணி செய்ய இயலாது என்று கூறி விடுப்பு கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மேலாளார் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதற்கான மருத்துவ சான்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த ஊழியர் தான், கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவமனைக்கு செல்லவில்லை என்றும் மருத்துவமனைக்கு செல்லும் அளவுக்கு தன்னிடம் காசு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.
அதற்கு மேலாளர் மருத்துவர் சான்று வழங்கும் வரை அலுவகத்தில் பணிபுரிய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் நீங்கள் செய்யும் வேலைக்கு தான் உங்களுக்கு ஊதியம் வழங்கப்படும் என்றும் காட்டமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர், “நீங்கள் நாள் முழுவதும் பிரேக் அறையில் அமர்ந்து மொபைல் போனில் கேம் விளையாடுங்கள், நான் வேலையை விட்டு செல்கின்றேன்” என்று கூறி பணியை விட்டுள்ளார்.
இந்நிலையில் ஊழியருக்கும் மேலாளருக்கும் இடையே நடைபெற்ற இந்த உரையாடலின் ஸ்க்ரீன் ஷாட் இணையத்தில் வைரலாக தொடங்கியது. இதை கண்டு ஆத்திரமடைந்த இணைய வாசிகள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் தங்களுக்கு நடந்த சில கசப்பான அனுபவங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.