லண்டன் வீதிகளில் நூற்றுக்கணக்கான அதிகாரிகளை நிறுத்தும் பெருநகர காவல்துறை
பிரித்தானியாவின் லண்டன் நகரில் பாலஸ்தீன போராட்டத்திற்காக பெருநகர காவல்துறை 100-கணக்கான பொலிசாரை நிறுத்துகிறது.
பாலஸ்தீன Solidarity Campaign
கடந்த புதன்கிழமை பிரித்தானியாவில், காசா போர்நிறுத்தம் கோரி அணிவகுப்பு நடத்தும் பாலஸ்தீன Solidarity Campaign, தங்கள் ஆர்ப்பாட்டத்தின் வழியில் தடைகளை ஏற்படுத்துவதாக காவல்துறை மிரட்டுகிறது என்று கூறியது.
ஆனால் பெருநகர காவல்துறை தற்போது அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை நண்பகல் முதல் West End முழுவதும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆர்பாட்டங்கள் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் காலை 11 மணிக்கு முன்னதாக தொடங்கி மாலை 5.30 மணிக்குள் முடிவடையும் என்று The Force கூறியது.
லண்டன் தெருக்களில் அணி
இந்த நிலையில் தான் பெருநகர காவல்துறை நூற்றுக்கணக்கான அதிகாரிகளை லண்டன் தெருக்களில் அணி வகுத்து நிற்க தயாராக்கியுள்ளது.
அத்துடன், எந்தவொரு பங்கேற்பாளரும் மத அல்லது இனரீதியாக மோசமான குற்றங்களுக்கு எல்லை மீறும் பதாகைகள் மற்றும் பலகைகளை வைத்திருக்கும் அறிக்கைகளை வெளியிடுவோர் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் காவல்துறை நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் துணை உதவி ஆணையர் Matt Ward கூறுகையில், ‘மக்கள் போராட்டம் நடத்தும் உரிமையை நாங்கள் மதிக்கிறோம், ஆனால் மற்ற லண்டன்வாசிகள் மற்றும் பார்வையாளர்களுக்கும் உரிமை உண்டு’ என தெரிவித்துள்ளார்.