இனி பயண முறையே மாறும்.. தமிழ்நாடு அரசின் ஆட்டோ, டாக்சி புக்கிங் செயலி TATO.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்
தமிழ்நாடு அரசின் ஆட்டோ, டாக்சி புக்கிங் செயலி TATO இன்னும் சில வாரங்களில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தனியார் OLA மற்றும் Uber ஆப்ஸ்களுக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அவர்கள் விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து, சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்று புதிய செயலியை உருவாக்க உள்ளது.
மாநில அரசின் சார்பாக TATO என்ற ஆட்டோ ரைடு செயலியை அந்த தனியார் நிறுவனம் அரசுக்கு உருவாக்கி தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் நிறுவனம் உருவாக்கும் செயலியை அரசு இயக்கும். இதில் மக்களுக்கும் , ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நியாயமான முறையில் கட்டணம் மற்றும் வருமானம் நிர்ணயம் செய்யப்படும்.
இடிஐஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் மாநாட்டு அரங்கில் இதற்கான மீட்டிங் நடந்தது. கூடுதல் போக்குவரத்து ஆணையர் முன்னிலையில், ‘டாக்சி’னா’ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் சங்கத்துக்கும் இடையே சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தான் இந்த செயலியை உருவாக்குவது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது.
இது தொடர்பாக Taxi’na குழு முதன்மை செயலாளரிடம் சுருக்கமான விளக்கத்தை அளித்துள்ளது. அதன்படி செயலியை எப்படி உருவாக்குவது, அதில் ஆட்டோ டிரைவர்கள் பதிவு செய்வது எப்படி. அது எப்படி மக்களுக்கு உதவும். கமிஷன் என்ன. எப்படி மக்கள் புக் செய்ய முடியும் என்பது போன்ற விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
என்ன செயலி: ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் சங்கங்கள் போன்ற அனைத்து தரப்பினரிடமும் இதை பற்றி மேற்கொண்டு மீண்டும் விளக்கம் அளிக்கப்படும். அதன்பின் அவர்களின் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு அதற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படும். ஆட்டோ ஓட்டுனர்கள் வைக்கும் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அதற்கு ஏற்ப செயலியில் மாற்றம் செய்யப்படும். அதேபோல் மக்கள் வைக்கும் கோரிக்கைகளும் இதில் ஏற்கப்படும். இதை அரசு நிறுவனமாக மாற்ற வேண்டும். இதில் அரசின் இலச்சினை இருக்க வேண்டும். அரசுதான் இதை கட்டுப்படுத்த வேண்டும். தனியார் நிர்வகிக்கலாம் என்ற கோரிக்கையை ஆட்டோ டிரைவர்கள் வைத்துள்ளனர்.
இந்த மீட்டிங்கில் ஆட்டோ டிரைவர்கள் முதல் 1.5 கி.மீ.க்கு மீட்டர் கட்டணத்தை குறைந்தபட்சம் ரூ.50 ஆகவும், அதன்பிறகு கி.மீ.க்கு ரூ.25 ஆகவும் மாற்றியமைக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதோடு போக்குவரத்து துறை அதிகாரிகள், ஆட்டோ டிரைவர்கள் சங்கம் மற்றும் நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆப்பைப் பயன்படுத்துவதற்கு ஓட்டுநர்கள் அல்லது பயணிகளிடமிருந்து நிறுவனம் எந்தக் கமிஷனையும் வசூலிக்கக் கூடாது என்பதை நாங்கள் தெளிவாகக் கூறியுள்ளோம். அவர்கள் செலுத்தும் நிர்வாக கட்டணங்களுக்கு அவர்கள் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால் தேவைற்ற கமிஷன் வாங்க கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர் .
வருகிறது ஆப்: இதை எல்லாம் அந்த தனியார் நிறுவனம் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் மாநில அரசின் சார்பாக TATO என்ற ஆட்டோ ரைடு செயலியை அந்த தனியார் நிறுவனம் அரசுக்கு உருவாக்கி தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனியார் நிறுவனம் உருவாக்கும் செயலியை அரசு இயக்கும். இதில் மக்களுக்கும் , ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நியாயமான முறையில் கட்டணம் மற்றும் வருமானம் நிர்ணயம் செய்யப்படும்.