அதிக சுவை, நன்மைகளை பெற பூண்டை எப்படி வெட்டுவது?
நீங்கள் பூண்டு பயன்படுத்தும் விதம் உங்கள் உணவுகளின் சுவையை கணிசமாக பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? சுவை நிறைந்த பூண்டு பச்சையாக, நறுக்கி, பொடியாக வெட்டி, அரைத்து அல்லது வறுத்து என பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப்படலாம்.
ஒவ்வொரு முறையும் அதன் சுவையை மாற்றுகிறது, என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
பூண்டு தயாரிக்கப்படும் மற்றும் சமைக்கப்படும் விதம் அதன் சுவை, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சமையல் பயன்பாடுகளை வியத்தகு முறையில் பாதிக்கலாம், இது உணவுத் திட்டமிடலில் பல்துறை மூலப்பொருளாக அமைகிறது.
பூண்டின் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்கு காரணமான அல்லிசின் கலவை, இந்த மாற்றங்களின் மையத்தில் உள்ளது, என்று உணவியல் நிபுணர் மான்வி லோஹியா (registered dietitian and head of holistic health and international business, Ekaanta, Haridwar) கூறினார்.
அலிசின் நிறைந்த பச்சை பூண்டு, அதன் வலுவான சுவைக்கு பெயர் பெற்றது. இந்த தீவிரம் சுவை மட்டுமல்ல, அதன் செறிவூட்டப்பட்ட மருத்துவ குணங்களையும் பிரதிபலிக்கிறது. அல்லிசின் ஆண்டிமைக்ரோபியல், அழற்சி எதிர்ப்பு மற்றும் இருதய நலன்களைக் கொண்டுள்ளது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அதன் முழுமையான சத்து மற்றும் வீரியம் சமைப்பதன் மூலம் குறைந்துவிடும், அதனால்தான் பச்சை பூண்டு அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, என்று லோஹியா குறிப்பிட்டார்.
இருப்பினும், பச்சை பூண்டின் கடுமையான சுவை எப்போதும் விரும்பப்படுவதில்லை. பூண்டு சமைப்பது அதன் ரசாயன அமைப்பை மாற்றுகிறது, இது லேசான மற்றும் பெரும்பாலும் இனிமையான சுவைக்கு வழிவகுக்கிறது.