மயிலாடுதுறை கடலில் மிதந்து வந்த “மர்ம பொருள்”.. சீர்காழி பீச்சில் தெறித்து ஓடிய ஜனம்.. சந்தன கலரில்?

கடந்த 2 நாட்களாகவே சென்னை பெசன்ட் நகரின் கடற்கரையிலும், கரையோர நீர்நிலைகளிலும், ப்ளூ டிராகன்கள் (Glaucus atlanticus) என்ற கடல் வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன.

வழக்கமாக, இந்த நீல டிராகன்கள் திறந்த கடல் மேற்பரப்பிலேயே காணப்படும்.. சூறாவளி, அல்லது புயல் அடித்தாலோ அல்லது கடல் சீற்றம் ஏற்பட்டாலோ, அல்லது காலநிலை மாற்றங்கள் நடந்தாலோ, எப்போதாவது இப்படி கடற்கரைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. அப்படித்தான் பெசன்ட் நகர் பீச்சுக்கு ப்ளூ டிராகன்கள் வந்திருக்கின்றன.

விஷத்தன்மை: லேசான விஷத்தன்மை கொண்ட இந்த டிராகன்களால், சிலசமயம், உடலில் பாதிப்புகள் ஏற்படலாம் என்கிறார்கள்.. இந்த டிராகன்கள் கொட்டிவிட்டால், அது பெரிய பிரச்சனையை உண்டுபண்ணிவிடுவாம். இந்த டிராகன்கள் குறித்த பேச்சுதான், பெசன்ட் நகர்பீச்சில் 2 நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், மயிலாடுதுறையில் அடுத்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில், அங்குள்ள மீனவர்கள் இன்று காலை வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றார்கள்.. அப்போது, கடலில் ஏதோ ஒரு பொருள் மிதந்து வருவதை பார்த்தனர்.. அந்த பொருள் மெதுவாக, மிதந்து வந்து இறுதியில் கரை ஒதுங்கிவிட்டது. இதனால், மீனவர்கள் அருகில் சென்று பார்த்தால், அது சிறிய இரும்பு பெட்டி போல இருந்தது..

சந்தன நிறம்: சந்தன நிறத்தில், ஒன்றரை அடி நீளம், ஒரு அடி அகலம் கொண்ட பெட்டியாக காணப்பட்டது.. வெளிப்பக்கத்தில் பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டிருந்தது.. இதனால் மீனவர்கள், உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தார்கள்.. இறுதியில், கடல் சார் மீன்பிடி சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோர காவல் குழுமம், க்யூ பிரிவு, தனிப்பிரிவு குழுவினருடன் போலீசார் திரண்டு வந்தனர்.

அந்த சந்தன கலரில் மிதந்துவந்த அந்த பெட்டியை கைப்பற்றிய போலீசார், கடற்கரையில் பாதுகாப்பாக வைத்தனர்.. பிறகு, பொதுமக்கள் யாரையும் பெட்டியின் அருகே செல்ல வேண்டாம் என்றும் வார்னிங் தந்துள்ளனர்..

பரபரப்பு: வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தரப்பட்டுள்ளதால், அவர்கள் உதவியுடன் பெட்டியை திறந்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது… அந்த சந்தன கலர் பெட்டிக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.. இதுகுறித்து அங்குள்ள மீனவர்களிடம் விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ள நிலையில், சீர்காழியில் பரபரப்பு நிலவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *