ஐடி ஊழியர்களுக்கு அடுத்த ஷாக்.. இந்த வருடம் சம்பள உயர்வுக்கும் பிரச்சனையா..?

2024 ஆம் ஆண்டில் இந்திய ஐடி துறையில் சம்பள உயர்வு குறைவாக இருக்கும் என்றும், ஐடி நிறுவனங்களில் பணியமர்த்தும் ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐடி நிறுவனங்கள் இந்த வருடம் சராசரியாக தங்களது ஊழியர்களுக்கு 8.4 – 9% சம்பள உயர்வை வழங்கும் என கணிக்கப்பட்டு உள்ளது, இது 2023 ஆம் ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 8.5-9.1% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டு, பெரும்பாலான நிறுவனங்கள் சம்பள உயர்வை நிதியாண்டின் முதல் காலாண்டு இறுதி வரை தள்ளி வைக்க வாய்ப்புள்ளது என்று டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனத்தின் துணைத் தலைவர் முனிரா லோலிவாலா தெரிவித்தார்.

பொதுவாக, ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பள உயர்வுகள் ஏப்ரல் மாதம் முதல் நடைபெறும், ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் வரையில் தள்ளிவைக்கப்படும் என தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் சராசரி சம்பள உயர்வு 8.5-9.1% ஆக இருந்தது போல், 2021 ஆம் ஆண்டில், 8.8% சம்பள உயர்வைக் கண்டது, 2022 ஆம் ஆண்டில் 9.7% ஆக இருந்தது.

“தற்போது ஐடி துறை நிறுவனங்களின் கவனம் பணியாளர் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் உள்ளது” என்று முனிரா லோலிவாலா கூறினார். இந்த ஆண்டும் ஐடி துறை பணியாளர் எண்ணிக்கையில் தேக்க நிலையை அல்லது எதிர்மறையான வளர்ச்சியைக் காணக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.

பல பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் டிசம்பர் 2023 இல் சம்பள உயர்வை வழங்கினாலும், அது சிறப்பாக இல்லை, பெரும்பாலான பணிகளுக்குச் சராசரியாக 7% ஆக இருந்தது என கூறியுள்ளார்.

பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் இந்திய உலக திறன் மையங்கள் (Global Capability Centres – GCCs) அதிகப்படியான ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தினாலும், இந்த ஆண்டு இதில் சராசரியாக 10-10.1% சம்பள உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி மற்றும் நிதி சேவைத் துறையில் இந்த ஆண்டு அதிகபட்ச சம்பள உயர்வு 11.1% இருக்கும் என்று அவர் கூறினார்.

2023 ஆம் ஆண்டில், இன்ஃபோசிஸ், விப்ரோ, HCL டெக் ஆகிய முன்னணி ஐடி நிறுவனங்கள் சம்பள உயர்வைக் கைவிட்டன அல்லது பல மாதங்கள் ஒத்திவைத்தன அல்லது பணியாளர் பதவிக்காலத்தைப் பொறுத்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் சம்பள உயர்வை வழங்கின.

டிசம்பர் மாதம், இன்ஃபோசிஸ் நவம்பர் மாதத்தில் இருந்து சிறிய அளவிலான ஊழியர்களுக்கு சராசரியாக 10% க்கும் குறைவான சம்பள உயர்வை வழங்கியது, ஆரம்ப நிலை அல்லது இடைநிலை பணியாளர்களை எந்த சம்பள உயர்வையும் அளிக்கவில்லை.

இதற்கிடையில், HCL டெக் மற்றும் விப்ரோ ஆகியவை இடைநிலை அல்லது மூத்த நிலை பதவியில் உள்ள பணியாளர்களுக்கு சம்பள உயர்வை அளிக்கவில்லை. மறுபுறம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) 2023 ஆம் ஆண்டில் 6-8% சம்பள உயர்வை வழங்கியது, அதே நேரத்தில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இரண்டு இலக்க சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *