வட மாவட்டங்கள் பாலைவனமாகும் அபாயம்.!! ஸ்டாலினை எச்சரிக்கும் ஈபிஎஸ்.!!
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அடிக்கல் நாட்டு நிகழ்வில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இந்த புதிய தடுப்பணை ஆந்திராவின் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்படுகிறது. ஆந்திர மாநில அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கடும் கண்டனம் தெரிவித்ததோடு தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு இதனை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டவுள்ள ஆந்திர மாநில அரசுக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனங்கள்.
சர்வதேச நதிநீர் பங்கீடு கொள்கையின்படி நதியின் கீழ்ப் பகுதியில் இருக்கும் மாநிலங்களுக்கே நதிநீரின் பங்கீட்டில் அதிக உரிமை உள்ளது.