பார்ட்டிக்காக லீவு கேட்ட அலுவலக ஊழியர்… கூலாக பதிலளித்த சிஇஓ!
இரவு நேர பார்ட்டியை முன்னிட்டு தன்னுடைய அலுவலக சிஇஓ-விடம் விடுமுறை முறை கேட்ட அலுவலக ஊழியர் ஒருவரின் வாட்ஸ் அப் ஸ்கிரீன் ஷாட்டை அந்த நிறுவனத்தின் சிஇஓ லிங்க்ட் இன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். நிறுவனத்தின் சிஇஓவே இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருப்பது மிகப்பெரும் அளவில் வைரலாகி பேசு பொருளாக மாறியுள்ளது.
அன்ஸ்டாப் எனும் நிறுவனத்தின் சிஇஓ-வும் நிறுவனருமான அங்கித் அகர்வால் தன்னுடைய லிங்க்ட் இன் சமூக வலைத்தளத்தில் தனக்கும் தன்னுடைய அலுவலக பணியாளருக்கும் இடையே நடந்த உரையாடலின் ஸ்க்ரீன்ஷாட்டை பதிவேற்றம் செய்துள்ளார். இரவு நேர பார்ட்டி இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதால் தனக்கு அடுத்த நாள் விடுமுறை வேண்டும் என மிகவும் வெளிப்படையாக அவர் தன்னுடைய சிஇஓவிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
“இரவு நேர பார்ட்டி இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் பணியாளர் தனக்கு ஒரு நாள் விடுமுறை வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதுபோன்று வெளிப்படையான தகவல் தொடர்பானது உங்களுடைய அலுவலகத்தின் மீதும், அணியின் மீதும் நீங்கள் மிகப் பெரும் அளவில் நம்பிக்கை வைத்தால் மட்டுமே சாத்தியமாகும்”. என்று அகர்வால் அந்த பதிவில் தன்னுடைய வாசகங்களை இணைத்துள்ளார்.
அதாவது தன்னுடைய பணியாளர் விடுத்த கோரிக்கையின் படி இரவு நேர பார்ட்டிக்காக சிஇஓ அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்று அவருக்கு விடுமுறை அளித்துள்ளது இதன் மூலம் நமக்கு தெளிவாகிறது. மேலும் “சக பணியாளர்கள் மிகவும் சௌகரியமாக உணரும்போது அவர்களால் வெளிப்படையான நேர்மையான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். இது ஒரு அணியாகவும் மிகப் பெரும் அளவில் நம்பிக்கையை உருவாக்கி வெற்றிக்கு வித்திடுகிறது” என்றும் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.