மாதவிடாய் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு: பழத்தை விட காயில் இவ்வளவு நன்மைகளா?
பொதுவாக பழங்கள் என்றாலே ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாக செயற்படுகின்றன.
அந்த வரிசையில் ஒன்று தான் பப்பாளி. வயிற்றில் ஏதாவது கோளாறு ஏற்படும் பொழுது பப்பாளி பழம் சாப்பிட வேண்டும் என்பார்கள்.
ஏனெனின் அதிகமான நார்ச்சத்துக்களை கொண்ட பழங்களில் பப்பாளியும் ஒன்று. செரிமானம், மலச்சிக்கல் ஆகிய பிரச்சினைகள் உள்ளவர்கள் பப்பாளி சாப்பிடுவார்கள்.
மேலும், பப்பாளி பழம் அடிக்கடி எடுத்து கொள்வதால் பப்பாளியில் இருக்கும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் இ சருமத்தை பளபளப்பாக்கும்.
அந்த வகையில் பப்பாளி பழத்தை விட காயில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது. அப்படியாயின் காயை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
1. செரிமானத்திற்கு தேவையான மெட்டபாலிக் நலத்தை பப்பாளி காயிலுள்ள பப்பாயின் (Papain) மற்றும் சைமோபப்பாயின் (Chymopapain) என்ற நொதிகள் மேம்படுத்தும். அத்துடன் இதிலுள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.
2. பப்பாளி காயிலுள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் ஃப்ரீ ரேடிகல் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாத்து என்றும் இளமையாக வாழ உதவி செய்யும்.
3. ஃபிளாவனாய்டு மற்றும் பீட்டா கரோடின் என்ற அழற்சி பண்புகளை எதிர்க்கும் ஆற்றல் பப்பாளிக்கு இயற்கையாகவே உள்ளது. இதன் காரணமாக பலர் பப்பாளியை டயட்டில் சேர்த்து கொள்கிறார்கள். மூட்டு வலி, கீல்வாதம் போன்ற நோய்களுக்கு நிவாரணம் கொடுத்து உடலில் ஏற்படும் வீக்கத்தை கட்டுபடுத்துகின்றது.
4. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தன்மை பப்பாளி அதிகமாகவே உள்ளது. இது சரும ஆரோக்கியத்திற்கும், கொலஜன் உற்பத்திக்கும் தேவையான வைட்டமின் சி வழங்குகின்றது.
5. மாதவிடாயில் கோளாறுகள் உள்ள பெண்கள் அடிக்கடி பப்பாளி காய் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனின் பப்பாளியில் இருக்கும் பப்பாயின் என்ற நொதி, மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தி, சீரற்ற மாதவிடாயிக்கு நிவாரணம் கொடுக்கின்றது.