மாஸ்கோ படுகொலைக்கான காரணத்தை நீதிமன்றில் வெளிப்படுத்திய குற்றவாளிகள்

ரஷ்யா-மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணத்திற்காக மக்களை சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

க்ரோகஸ் சிட்டி ஹாலில் கடந்த 23ம் திகதி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்ற உத்தரவு
சந்தேகநபர்கள் நால்வரும் காயங்களுடன் சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Delerdzon Mirzoyev, Saidakrami Murodaly Rachabalizoda, Shamsidine Fariduni மற்றும் Muhammadzobir Faizov ஆகியோர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அடையாப்படுத்தப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து நால்வரையும் எதிர்வரும் மே 22ஆம் திகதி வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *