Photoshop விவகாரம்: இளவரசி கேட்டை கேலி செய்துள்ள ஒரு நாட்டின் மன்னர்
இளவரசி கேட்டின் Photoshop விவகாரம், பிரித்தானியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிவருகிறது.
இளவரசி கேட்டை கேலி செய்துள்ள ஒரு நாட்டின் மன்னர்
இளவரசி கேட்டின் Photoshop விவகாரம் உலகம் முழுவதும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகிவரும் நிலையில், அமெரிக்கத் தொலைக்காட்சிகள், இளவரசி கேட்டை மையமாக வைத்தே பல நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன.
இந்நிலையில், நெதர்லாந்து நாட்டின் மன்னரும், இளவரசி கேட்டை கேலி செய்யும் வீடியோ ஒன்று எக்ஸில் வேகமாக பகிரப்பட்டுவருகிறது.
நேற்று, நெதர்லாந்து நாட்டின் மன்னரான Willem-Alexander (56), நிகழ்ச்சி ஒன்றின்போது தன் நாட்டுக் குழந்தைகளை சந்தித்துள்ளார். அப்போது ஒரு குழந்தை, என்னிடம் உங்கள் முழுக் குடும்பத்தின் புகைப்படமும் உள்ளது என்று கூறுகிறாள்.
அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளிக்கும் மன்னர் Willem-Alexander, ஆமாம், அதை நான் photoshop செய்யவில்லை என்று கூற, கூடியிருந்த அனைவரும் சத்தமாக சிரிக்கிறார்கள்.
இந்தக் காட்சிகள் சமூக ஊடகமான எக்ஸில் வேகமாக பகிரப்பட்டுவருகின்றன.
Meisje had al een foto van een jonge Willem-Alexander gezien. “Die was niet gephotoshopt,” zegt Willem-Alexander pic.twitter.com/4VXtq1ke8q
— Rick Evers (@RickEversRoyal) March 12, 2024