பிக்பாஸ் 7 டைட்டில் வின்னரை கைது செய்த போலீஸ்.. ஏன் தெரியுமா?
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி 7வது சீசன் தற்போது நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் இறுதிக்கட்ட போட்டியை நெருங்கவிருக்கிறது. அதேபோல தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃபினாலே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. பிக் பாஸ் தெலுங்கு பொருத்தவரை பல்லவி பிரசாந்த் அமர்தீப் என இரண்டு போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான போட்டி நிலவிவந்தது. இறுதியில் பல்லவி பிரசாந்த் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
யார் வெற்றியாளர் என அறிவிக்கும் முன்பே ரசிகர்கள் அன்னபூர்ணா ஸ்டுடியோவின் வாசலில் காத்திருந்தார்கள். வெற்றியாளர் பல்லவி பிரசாந்த் என அறிவிக்கப்பட்ட உடனேயே அவரது ரசிகர்கள் அமர்தீப் மீது தாக்குதலில் ஈடுபட்டார்கள். மேலும், அமர்தீப் சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கினர்.
அது மட்டுமல்லாமல் இந்த சீசனில் போட்டியாளர்களாக இருந்த அஸ்வினி, கீது ராயல் ஆகியோறது கார்களையும் சேதப்படுத்தி இருக்கிறார்கள். இது போதாதென அரசு பேருந்துகளையும் உடைத்து இருக்கிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவ ஒரு விளையாட்டிற்காக இவ்வளவு பெரிய கலவரம் நடப்பதா என கண்டனம் தெரிவித்து வந்தனர்.
నిన్ననే కదరా మాట్లాడుకున్నాం ఇతని గురించి, ఇంతలోనే అరెస్ట్ చేసేశారా?
అంత పెద్ద తప్పు అతనేం చేశాడు? పబ్లిక్ న్యూసెన్స్ చేసింది ఫ్యాన్స్ అనుకున్నానే?#PallaviPrasanth#BiggBossTelugu7 https://t.co/3j8bGeJbQv pic.twitter.com/v8UQw26fRl
— SKY (@SriKanthY_) December 20, 2023
இதனால் பாதிக்கப்பட்ட போட்டியாளர்கள் கீது, ஜூபிலி ஹில்ஸ் ஆகியோர் போலீசில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து பல்லவி பிரசாந்த் மற்றும் அவரது ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்லவி பிரசாந்த் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் சிலரையும் கைது செய்தனர். இந்த வீடியோ காட்சிகளும் இணையத்தில் வெளியாக தெலுங்கு திரையுலகில் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.