கடகடவென உயரும் தங்கம் விலை… இன்று ரேட் என்ன தெரியுமா?

இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது.

இதனிடையே, இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்றைய தங்கம் விலை

கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரன் ரூ.120 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,600-க்கும், கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,825-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், தங்கத்தின் விலை இன்றும் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதனால், நகைப் பிரியர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.46,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,830-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,355-க்கும், ஒரு சவரன் ரூ. 50,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *