ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த பிரதமர் ரிஷியின் மனைவி: கிடைத்த பெரிய வரிச்சலுகை

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த சலுகை ஒன்றின் மூலம், அவரது மனைவியான அக்ஷதா மூர்த்திக்கு லாபம் கிடைக்கலாம் என்ற குற்றச்சாட்டு சர்ச்சையை உருவாக்கியது.
மனைவியால் சர்ச்சையில் சிக்கிய பிரித்தானிய பிரதமர் ரிஷி
கடந்த ஆண்டு, பிரித்தானிய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது. அதில், குழந்தைகள் நலன் அமைப்புகளுக்கான உதவித்தொகை, சில நிபந்தனைகளுக்கு உட்படும் நிலையில் இரட்டிப்பாக்கப்படுவதாக அறிவித்திருந்தார் சேன்ஸலர் ஜெரமி ஹண்ட்.
பிரதமர் ரிஷியின் மனைவியான அக்ஷதா மூர்த்தி, குழந்தைகள் நல அமைப்பான Koru Kids என்னும் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்தார்.
ஆகவே, பிரதமர் அறிவித்த சலுகை மூலம், அவரது குடும்பத்துக்கே கூடுதல் இலாபம் கிடைக்கிறதா என்பதைக் குறித்து ரிஷி பதிலளிக்கவேண்டுமென அரசியல்வாதிகள் பலர் கோரியிருந்தனர்.